நாள்: 08.04.2024 - திங்கள் கிழமை


நல்ல நேரம்:


காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


மாலை 7.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை


குளிகை:


பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை


எமகண்டம்:


காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


மனதை உறுத்திய சில பிரச்சனைகள் குறையும். பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் அடைவீர்கள். காரசாரமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். செய்தொழிலில் முயற்சிக்கேற்ப லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். நெருக்கமானவர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். போட்டிகள் தொடர்பான செயல்பாடுகளில் புதிய அனுபவம் ஏற்படும். நலம் நிறைந்த நாள். 


ரிஷபம்


வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும்.  மருத்துவம் குறித்த ஆலோசனை கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். திறமைக்கேற்ப புதிய வாய்ப்பு கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள். 


மிதுனம்


தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் சாதகமாகும். தடைபட்ட கட்டிடப் பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களுடன் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். நட்பு நிறைந்த நாள். 


கடகம்


பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் குழப்பம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பயணம் சார்ந்த செயல்பாடுகளால் விரயம் ஏற்படும். உத்தியோகத்தில் சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண சிந்தனை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள். 


சிம்மம்


எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது.  முயற்சிகளில் சில மாற்றமான அனுபவங்கள் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் சில விரயங்கள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். கருத்துகளை வெளிப்படுத்தும்பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். கனிவு வேண்டிய நாள். 


கன்னி


பயணங்களால் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப வாய்ப்பு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். சுகம் நிறைந்த நாள். 


துலாம்


சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். இழுபறியாக இருந்துவந்த சில தனவரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். பயணங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நெருக்கமானவர்களால் ஆதாயம் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள். 


விருச்சிகம்:


தனவரவுகள் தாராளமாக இருக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். வீடு மாற்றம் குறித்த சிந்தனை அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். ஆதரவு நிறைந்த நாள். 


தனுசு


எதிர்பார்த்த தனவரவுகளால் திருப்தியான சூழல் ஏற்படும். பேச்சுக்களுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்பால் மாற்றம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். லாபம் நிறைந்த நாள். 


மகரம்


நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். அஞ்சல் துறையில் புதிய வாய்ப்பு ஏற்படும். உயர்வு நிறைந்த நாள். 


கும்பம்


மனதில் வித்தியாசமான சிந்தனை அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சிக்கலான பணிகளையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். பேச்சுக்களில் பொறுமையை கையாளுவது நல்லது. தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள். 


மீனம்


பிரபலமானவர்களின் சந்திப்பு ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் சில மாற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் குணம் அறிந்து செயல்படுவீர்கள். வருமானம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். மனதில் முன்னேற்றத்திற்கான சிந்தனை பிறக்கும். உத்தியோகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.