பீகார் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களைத் நிதிஷ்குமார் தொட்டதையடுத்து, நாங்கள் மிகவும் மோசமாக உணர்ந்தோம் என்று ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
மோடி காலைத் தொட்டு வணங்கிய நிதிஷ்குமார்:
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பரப்புரை கூட்டம் நடத்தினர்.
அப்போது ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முதலமைச்சரான நிதிஷ் குமார், பிரதமர் மோடி காலை தொட்டு வணங்கியுள்ளார் என்று தேஜஸ்வி தெரிவித்தார்.பீகார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், "நிதிஷ் குமார் பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களை தொட்ட புகைப்படத்தை இன்று பார்த்தேன். இதை பார்த்த நாங்கள் மிகவும் மோசமாக உணர்ந்தோம். நிதிஷ் குமார் எங்கள் பாதுகாவலர்.
நிதிஷ் குமார் அளவுக்கு அனுபவம் வாய்ந்த முதல்வர் வேறு யாரும் இல்லை. ஆனால், பிரதமர் மோடியின் பாதங்களைத் தொட்டு இருக்கிறார். இந்த செயலால் நாங்கள் மிகவும் மோசமாக உணர்ந்தோம் என்றும் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.