நாள்: 24.04.2024 


கிழமை: புதன்


நல்ல நேரம்:


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை


குளிகை:


காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை


எமகண்டம்:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பேச்சுத் திறமைகளின் மூலம் லாபம் அடைவீர்கள். பார்வை தொடர்பான இன்னல் குறையும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் திருப்பம் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.  


ரிஷபம்


உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் அபிவிருத்திக்கான வாய்ப்பு கிடைக்கும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.  


மிதுனம்


அரசுப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பணி நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கலை துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.


கடகம்


மூலிகை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். கல்வியில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். இறைப்பணிகளின் மூலம் அலைச்சல் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் விரயம் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.


சிம்மம்


வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.  விவேகத்துடன் செயல்பட்டு எண்ணியதை செய்து முடிப்பீர்கள். வாகனம் மாற்றுவது தொடர்பான சிந்தனை மேம்படும். மனை விருத்தி தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சிறுதொழிலில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.


கன்னி


புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.


துலாம்


பணி நிமிர்த்தமான அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். முயற்சி மேம்படும் நாள்.


விருச்சிகம்:


தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பணி நிமிர்த்தமான அயல்நாட்டு வாய்ப்புகள் சாதகமாகும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளில் விவேகத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிள்ளைகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கவலை விலகும் நாள்.


தனுசு


கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். சில அனுபவங்களின் மூலம் மனதில் புதிய பாதை புலப்படும். நம்பிக்கையானவர்களின் ஆதரவு கிடைக்கும். வங்கியில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். செய்தொழிலில் மேன்மை ஏற்படும். பொதுப்பணிகளில் லாபம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். 


மகரம்


உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். சில விஷயங்களில் தெளிவான முடிவு பிறக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.  


கும்பம்


வெளிவட்டாரத்தில் சிந்தித்துச் செயல்படவும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனை மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.  


மீனம்


உத்தியோகத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்துவது நல்லது. நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.