நாள்: 23.04.2024 


கிழமை: செவ்வாய்


நல்ல நேரம்:


காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


பிற்பகல் 3.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை


குளிகை:


பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை


எமகண்டம்:


காலை 9.00 மணி முதல் பகல் 10.00 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


வெளிவட்டாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பழைய நினைவுகளால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தள்ளிப்போன சில காரியங்கள் எளிதில் முடியும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். லாபம் நிறைந்த நாள்.  


ரிஷபம்


திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். வழக்குகளில் சாதகமான  முடிவு ஏற்படும். பயம் விலகும் நாள்.  


மிதுனம்


ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். சிற்றின்ப செயல்பாடுகளால் விரயங்கள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மனதில் பணி நிமிர்த்தமான புதிய இலக்குகள் பிறக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். விரும்பிய பொருட்ளை வாங்கி மகிழ்வீர்கள். பரிவு வேண்டிய நாள்.


கடகம்


தடைபட்ட பணிகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். அசையா சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். வாகன பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சுபம் நிறைந்த நாள்.    


சிம்மம்


மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவது குறித்த எண்ணங்கள் மேம்படும். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். நன்மை நிறைந்த நாள். 


கன்னி


எதிராக இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வர்த்தகப் பணிகளில் ஆதாயம் மேம்படும். எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். கவலை மறையும் நாள்.


துலாம்


குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். எதிலும் தனித்தன்மையோடு செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணைவர் பற்றிய சிந்தனை மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். செலவு நிறைந்த நாள். 


விருச்சிகம்:


வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகளை பொறுமையுடன் வசூலிக்கவும். மற்றவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். அன்பு நிறைந்த நாள். 


தனுசு


உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் புதிய வாய்ப்பு கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகளால் தெளிவு ஏற்படும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். தாமதம் நிறைந்த நாள். 


மகரம்


முயற்சிக்கேற்ப புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள்.  மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். எதிர்பாராத பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் ஆலோசனை கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.


கும்பம்


கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளியூர் வர்த்தகம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள். 


மீனம்


குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உயர்  அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் தாமதம் ஏற்படும். செயல்களின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். போட்டி நிறைந்த நாள்.