விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அப்பம்பட்டு என்ற பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் , திருமணம் நடந்த கையோடு ரத்த தானம் செய்த புதுமண தம்பதிகள். இச்செயல் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மனிதம் காப்போம் அமைப்பின் சார்பில்,கேசவ பிரகாஷ் சோனியா தம்பதியின் திருமணம் நடக்கும் தனியார் திருமண மாபெரும் ரத்ததானம் முகாம் மண்டபத்திலேயே நடைபெற்றது. ரத்ததான முகாமிற்கு என திருமண மண்டபத்திலே தனியாக இடம் ஒதுக்கி இரத்ததான முகாம் நட்த்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செஞ்சி எடுத்த நரசிங்க ராயன்பேட்டை ஊராட்சியை சேர்ந்த புதுமண தம்பதிகள் கேசவ பிரகாஷ் -சோனியா தம்பதியினர்,திருமணம் முடிந்த கையோடு ரத்த தானம் செய்தனர்.
இவர்கள்தான் ( கேசவ பிரகாஷ்- சோனியா) தம்பதியினர் விழுப்புரம் மாவட்டத்திலேயே முதல்முறையாக திருமணம் முடிந்த கையோடு ரத்த தானம் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
தம்பதிகள் ரத்ததானம் செய்வது பார்த்து, அவரது நண்பர்கள், உறவினர்கள் என சுமார் 15-க்கும் மேற்பட்ட நபர்கள் ரத்ததானம் அளிக்க முன்வந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ரத்ததானம் அளித்த அனைவருக்கும் சான்றிதழனை மருத்துவர் வழங்கினார்.
திருமணம் நடைபெற்ற அன்றே ரத்ததானம் அளித்த புதுமண தம்பதிகளின் இச்செயல் பொதுமக்களின் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவருமே ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.