நாள் - 03.12.2023 -  ஞாயிற்று கிழமை


நல்ல நேரம்:


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை


இராகு:


மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை


குளிகை:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


எமகண்டம்:


நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30  மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். சமூகப் பணிகளில் ஆதரவு கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் சாதகமான சூழல் அமையும். சிலரின் சந்திப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். லாபகரமான நாள்.


ரிஷபம்


பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் மேன்மையான சூழல் அமையும். பணியாளர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் சாதகமாகும். செலவுகள் நிறைந்த நாள்.


மிதுனம்


வியாபாரத்தில் லாபகரமான சூழல் அமையும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பப் பெரியோர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதில் இருந்துவந்த குழப்பம் விலகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.


கடகம்


மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் செல்வாக்கு மேம்படும். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். இட மாற்றச் சிந்தனைகளைக் குறைத்துக் கொள்ளவும்.  பிள்ளைகளால் சுபச்செலவுகள் உண்டாகும். பாராட்டுகள் நிறைந்த நாள்.


சிம்மம்


பொருளாதார ரீதியாக இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நிதானம் வேண்டும். நண்பர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். பொதுவாழ்வில் செல்வாக்கு மேம்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வியாபார கூட்டாளிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வெற்றி நிறைந்த நாள்.


கன்னி


எதிலும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் குறையும். பூர்வீக சொத்துக்களின் வழியில் லாபம் மேம்படும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்குக் கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை விலகும். உத்தியோகத்தில் வருமான உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். நலம் நிறைந்த நாள்.


துலாம்


தனவரவு தாராளமாக இருக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மருத்துவம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். பொருளாதார நிலை உயரும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


விருச்சிகம்:


நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். மனை விற்பனையால் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் கவனம் வேண்டும். சேமிப்பை உயர்த்தும் எண்ணங்கள் மேம்படும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். தந்தை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத பொருள் வரவுகள் சிலருக்கு உண்டாகும். வாசனைத் திரவியங்கள் மீது ஈர்ப்பு ஏற்படும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.


தனுசு


நெருங்கியவர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதிய மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். மறதி நிறைந்த நாள்.


மகரம்


சுபகாரிய எண்ணங்கள் கைகூடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். மனதில் நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள்.  தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். எதிர் பாலின மக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். பணிவு வேண்டிய நாள்.


கும்பம்


எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளைக் குறைப்பீர்கள். வியாபாரப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்பும், அதிகாரமும் அதிகரிக்கும். அசதிகள் விலகும் நாள்.


மீனம்


கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் அகலும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விவசாயப் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.