நாள்: 30.12.2023 - சனிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை
மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை
இராகு:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம்:
பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
சூலம் - கிழக்கு
மேஷம்
எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். தந்தையுடன் தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். போட்டிகளில் பங்கு பெற்று மனம் மகிழ்வீர்கள். சகோதரர் வழியில் ஆதரவு உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
ரிஷபம்
நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அறிவியல் சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். துணைவர் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கைகள் ஏற்படும். உதவிகள் நிறைந்த நாள்.
மிதுனம்
எதிராக செயல்பட்டவர்கள் பற்றிப் புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பயணங்களின் மூலம் அறிமுகம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பயணம் நிறைந்த நாள்.
கடகம்
சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். வர்த்தகப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். தாய்மாமன் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அகலும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.
சிம்மம்
எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்குள் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் பொறுமையுடன் செயல்படவும். உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். குழப்பம் விலகும் நாள்.
கன்னி
உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயணம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தொழிலில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெற்றி நிறைந்த நாள்.
துலாம்
குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உலக வாழ்க்கை பற்றி புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். உடலில் இருந்துவந்த அசதிகள் விலகும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
விருச்சிகம்:
எதிர்பார்த்த சில வாய்ப்புகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். கலை சார்ந்த துறைகளில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். வங்கி பரிவர்த்தனைகளில் விழிப்புணர்வு வேண்டும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புகழ் நிறைந்த நாள்.
தனுசு
விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றி புதிய கண்ணோட்டங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் தடைபட்ட தனவரவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.
மகரம்
நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மூத்த சகோதரர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிகளில் சில மாற்றமான சூழல் அமையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் தொடர்புகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். வெளியூர் பயணங்களினால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நன்மை நிறைந்த நாள்.
கும்பம்
புதிய முதலீடுகளில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமாக சில நுட்பங்களை அறிவீர்கள். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். ஓய்வு நிறைந்த நாள்.
மீனம்
வேளாண் துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். உற்பத்தி துறைகளில் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய துறை சார்ந்த அறிமுகம் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். சலனம் நிறைந்த நாள்.