நாள் - 22.11.2023 - புதன் கிழமை
நல்ல நேரம்:
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் மனதில் அமைதி உண்டாகும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சிந்தனை மேம்படும் நாள்.
ரிஷபம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
மிதுனம்
பங்கு வர்த்தகத்தில் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். தொழில் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசு சார்ந்த துறைகளில் அதிகாரமும், பொறுப்பும் அதிகரிக்கும். சொத்து வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். அனுகூலம் நிறைந்த நாள்.
கடகம்
எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். உறவுகளுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய துறை சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
சிம்மம்
சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த வரவுகளில் காலதாமதம் உண்டாகும். இறை வழிபாடுகளின் மூலம் மனதில் அமைதி ஏற்படும். பணிகளில் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். கலை பணிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், புரிதலும் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
கன்னி
உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். கால்நடை சார்ந்த விஷயங்களில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பரிவு வேண்டிய நாள்.
துலாம்
உடல் அளவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வேலையாட்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். ஏஜென்சி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சிலரின் வருகையின் மூலம் மாற்றம் பிறக்கும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் உண்டாகும். நுட்பமான சில விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாகச் செயல்படுவார்கள். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
தனுசு
பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வயதில் மூத்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தோற்றப்பொலிவில் மாற்றம் பிறக்கும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும். களிப்பு நிறைந்த நாள்.
மகரம்
பிறரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் திருப்தியான சூழல் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மறதி குறையும் நாள்.
கும்பம்
வாதத் திறமைகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.
மீனம்
புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் இனம்புரியாத தேடல் பிறக்கும். உடனிருப்பவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். புதிய உணவுகளில் கவனம் வேண்டும். உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரப் பணிகளில் பயணங்கள் கைகூடும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், இலக்குகளும் பிறக்கும். அன்பு நிறைந்த நாள்.