நாள்: 01.10.2022


நல்ல நேரம் :


காலை 7.45 மணி  முதல் 8.45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை


மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை


இராகு:


காலை  9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை :


காலை  6.30 மணி முதல் 7.30 மணி வரை


எமகண்டம் :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை


சூலம் –கிழக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். அதிகரிக்கும் பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள். நல்ல பலன்களைக் காண அமைதியாக செயல்பட வேண்டும். பயணத்தின் போது பண இழப்பிற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, இன்று கவலையை ஏற்படுத்தும் சூழ்நிலை காணப்படும். உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழுங்கள். அதிகப் பணிகள் காரணமாக இன்று வேலை செய்வதில் மூழ்கி இருப்பீர்கள். சமயோசித புத்தியை பயன்படுத்தினால் வெற்றி காணலாம்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, இன்று சிறந்த பலன்கள் கிடை க்கும். நீங்கள் உறுதியுடனும் தைரியத்துடனும் காணப்படுவீர்கள்.இதன் மூலம் சீரான பலன்களைப் பெறலாம். நீங்கள் உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான பலன்களும் வெற்றியும் கிடைக்கும்.


கடகம் :


கடக ராசி நேயர்களே, இன்று பயனுள்ள பலன்கள் கிடைக்கும். உங்கள் நம்பிக்கையான அணுகுமுறை மூலம் வெற்றி கிடைக்கும். இன்று நல்ல பலன்கள் கிடைப்பதற்கு திட்டமிட வேண்டியது அவசியம். பணிகள் அதிகமாக காணப்பட்ட போதிலும் குறித்த நேரத்திற்குள் அதனை முடிப்பீர்கள். பணிகளை நம்பிக்கையுடன் கையாள்வீர்கள்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே,   இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. இன்று அமைதியற்ற மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு உங்களிடம் காணப்படும். மற்றவர்களுடன் உரையாடும் போது பாதகமான விளைவுகள் ஏற்படாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். பிரார்த்தனை மூலம் சூழ்நிலையைக் கையாளும் நம்பிக்கையைப் பெறலாம்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே,  உங்கள் திறமைகளை சோதிக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் முன்னேற்றத்தில் மந்த நிலை காணப்படும். அதிகமாக சிந்திக்காமல் தெளிவான மன நிலையுடன் இருங்கள். இன்று பணிகள் சலிப்பைத் தரும் வகையில் இருக்கும். அதிக பணிகள் காரணமாக சில பணிகள் நிலுவையில் இருக்கும். திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இடம் பெறும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். கடவுளின் ஆசியால் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.  பணியில் உங்களது அபாரமான செயல் திறன் காரணமாக உங்கள் மேலதிகாரிகளிடம் உங்கள் நன்மதிப்பு உயரும். கடின உழைப்பு மூலம் வெற்றி கிடைக்கும்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு சாதகமாக விளைவுகள் அமைய இன்று உங்கள் செயல்களில் எச்சரிக்கை தேவை. இசை கேட்பது மற்றும் திரைப்படங்கள் பார்த்தல் போன்ற நிகழ்சிகள் ஆறுதலைத் தரும். உங்கள் நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. பொருளாதார பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் பணத்தை சேமிக்க இயலாது.


 தனுசு :


தனுசு ராசி நேயர்களே,  இன்று விரும்பும் பலன்கள் கிடைக்காது. உங்கள் பணிகளை சிறப்பாக திட்டமிட வேண்டும். இன்று சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பது சிறந்தது. இன்று பணிகள் அதிகமாக காணப்படும். இதனால் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது.


மகரம் :


மகர ராசி நேயர்களே, உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். இன்றைய நாள் சமூகமாக இருக்காது. தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். வெற்றி பெறுவதற்கு உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் பணிகளைக் கையாளும் போது கவனம் தேவை. இன்று பணிகள் அதிகமாக காணப்படும். உங்களால் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே,  உங்கள் நண்பர்களிடமிருந்து உதவி பெறக்கூடிய சாதகமான சூழ்நிலை காணப்படுகின்றது. உங்களின் திட முயற்சி மூலம் பணிகளை செவ்வனே ஆற்றி இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.இன்று நீங்கள் பணிகளை விரும்பி செய்வீர்கள். பணிகளை எளிதாகச் செய்வீர்கள். என்றாலும் வெற்றி பெற நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.


மீனம்:


மீன ராசி நேயர்களே, இன்று முன்னேற்றகரமான நாள். உங்களிடம் செயல்களை செய்து முடிக்கும் ஆற்றலும் உற்சாகமும் காணப்படும்.இன்று அனைத்து விதத்திலும் செழிப்பான நாள். உங்கள் பணி சம்பந்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் திருப்தி உண்டாகும். நீங்கள் உங்கள் பணிகளை விரும்பிச் செய்வீர்கள்.