மகளிருக்கான 8வது ஆசிய கோப்பை தொடர் பங்களாதேஷ் நாட்டில் நாளை முதல் தொடங்க உள்ளது. இந்த முறை பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளனர். அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெற உள்ளது. இம்முறை ஆசிய கோப்பை தொடர் டி20 போட்டிகளாக நடைபெற உள்ளது. 


இந்நிலையில் நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்தச் சூழலில் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவின் வரலாறு என்ன?


ஆசிய கோப்பையில்  இந்திய மகளிர் அணி:


இதுவரை நடைபெற்றுள்ள 7 ஆசிய கோப்பை மகளிர் தொடரில் இந்திய அணி அதிகபட்சமாக 6 முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது. 4 முறை ஒருநாள் ஆசிய கோப்பையை தொடரையும், 2 முறை டி20 ஆசிய கோப்பை தொடரையும் இந்தியா வென்றுள்ளது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 ஆசிய கோப்பை தொடரை மட்டும் இந்திய அணி வெல்லவில்லை. 2018ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணி பங்களாதேஷ் அணியிடம் தோல்வி அடைந்தது. 


 






தற்போது வரை ஆசிய கோப்பை தொடரில் விளையாடியுள்ள 32 போட்டிகளில் இந்திய அணி 30 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே ஆசிய கோப்பை தொடரில் இந்திய மகளிர் மிகுந்த ஆதிக்கம் நிறைந்த அணியாக வலம் வருகிறது. 


இந்திய மகளிர் அணியின் அட்டவணை:


அக்டோபர் 1: இந்தியா vs இலங்கை


அக்டோபர் 3: இந்தியா vs மலேசியா


அக்டோபர் 4: இந்தியா vs ஐக்கிய அமீரகம்


அக்டோபர் 7: இந்தியா vs பாகிஸ்தான்


அக்டோபர் 8: இந்தியா vs பங்களாதேஷ்


அக்டோபர் 10: இந்தியா vs தாய்லாந்து


(இந்திய அணியின் போட்டிகள் அனைத்தும் மதியம்  1 மணி தொடங்குகின்றன.)


இந்தப் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். முதலாவது மற்றும் இரண்டாவது அரையிறுதிப் போட்டிகள் வரும் அக்டோபர் 13ஆம் தேதி நடைபெறும். அதைத் தொடர்ந்து இறுதிப் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்திய மகளிர் அணி இலங்கை அணிக்கு எதிராக 16 முறை டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் கடைசியாக 5 முறை நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 4 முறை இலங்கை மகளிர் அணியை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: டி20 உலகக் கோப்பை அணியுடன் செல்கிறார்களா சிராஜ், உம்ரான் மாலிக்?-பிசிசிஐ அதிரடி முடிவு என்ன?