நாள்: 12.05.2023 - வெள்ளிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கேளிக்கை தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் வருமானம் மேம்படும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் வித்தியாசமான சிந்தனைகளை செயல்படுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
ரிஷபம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மேம்படும். இனிமை வேண்டிய நாள்.
மிதுனம்
வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் சுதந்திரப்போக்கு மேம்படும். ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். பரிசுகள் கிடைக்கும் நாள்.
கடகம்
சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். மனதில் உள்ள கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நம்பிக்கை பிறக்கும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சிக்கல் விலகும் நாள்.
சிம்மம்
உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எண்ணங்களில் இருந்துவந்த சோர்வு நீங்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பொன், பொருள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பேச்சில் தெளிவும், மனதில் தன்னம்பிக்கையும் உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். ஓய்வு வேண்டிய நாள்.
கன்னி
வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றம் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. செலவு நிறைந்த நாள்.
துலாம்
எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானம் வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். சிரமம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். பொதுமக்கள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். புதுவிதமான அனுபவத்தின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் மூலம் பொருட்சேர்க்கை ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
தனுசு
கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ள சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
மகரம்
பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். கற்பனை தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். நலம் நிறைந்த நாள்.
கும்பம்
வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழல் மறையும். எதிர்பாராத சிறு சிறு வாய்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.
மீனம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுவதை விட சிந்தித்து செயல்படவும். வழக்குகள் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.