நாள்: 19.04.2023 - புதன் கிழமை
நல்ல நேரம் :
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
குளிகை :
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
எமகண்டம் :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
குடும்ப உறுப்பினர்கள் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆவணம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுமை வேண்டும். உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்தும். மேன்மை நிறைந்த நாள்.
ரிஷபம்
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். குழந்தைகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். பணிகளில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் உள்ள நுணுக்கங்களை அறிவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.
மிதுனம்
தொழிலில் புதிய வாய்ப்புகளின் மூலம் லாபம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதமான சூழல் அமையும். மாணவர்களுக்கு உயர்கல்வி நிமிர்த்தமான குழப்பம் நீங்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.
கடகம்
வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் சாதகமாக அமையும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் உலகியல் வாழ்க்கையை பற்றிய புதுவிதமான எண்ணங்கள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.
சிம்மம்
செய்யும் காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். அலைச்சல்களின் மூலம் அவ்வப்போது உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள்.
கன்னி
மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வர்த்தக வியாபாரத்தில் பொருள் வரவுகள் மேம்படும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.
துலாம்
இழுபறியான வரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பற்றிய புரிதல் ஏற்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்குகளில் திருப்பம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.
விருச்சிகம்
பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவார்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பயனற்ற செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். மனதை உறுத்திய பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் சேர்வது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
தனுசு
அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய சிந்தனைகள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தாயின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதில் பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்படும். செலவுகள் நிறைந்த நாள்.
மகரம்
வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எந்தவொரு செயலையும் மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சிந்தனைகள் நிறைந்த நாள்.
கும்பம்
செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவு மேம்படும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
மீனம்
உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். தற்பெருமை சார்ந்த எண்ணங்களை குறைத்து கொள்வதன் மூலம் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்கவும். வரவுகள் நிறைந்த நாள்.