நாள்: 19.04.2022
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
இரவு 7.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை
இராகு :
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
குளிகை :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
எமகண்டம் :
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் – வடக்கு
மேஷம் :
இன்றைய நாள் சிறப்பாக இருக்கும் உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்கள் காணப்படும். அதனால் நன்மை ஏற்படும்.
ரிஷபம் :
இன்று சமநோக்கு நாளாக அமையும். இன்று புதிய நண்பர்கள் மற்றும் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று அதிர்ஷ்டம் காணப்படும்.
மிதுனம் :
இன்று அதிர்ஷ்டமான நாள். இன்று எதிர்ப்படும் எந்தத் தடைகளையும் நீங்கள் எளிதில் சமாளிப்பீர்கள். இன்று அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நடக்கும்.
கடகம் :
நீங்கள் இன்று கடைசி நிமிடத்தில் வாய்ப்பை இழப்பீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
சிம்மம் :
இன்று உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாகும் நாள். இன்று நல்ல பலன்களைக் காண புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். பிரியமானவர்களுடன் மோதல்கள் ஏற்படாமல் இருக்க கவனமாக தொடர்பு கொள்ள வேண்டும்.
கன்னி :
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமையலாம். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
துலாம் :
உங்கள் உணர்ச்சிவசப்படும் போக்கின் காரணமாக நீங்கள் சில சிறந்த வாய்ப்புகளை இழக்க நேரலாம். எனவே இன்று நீங்கள் சாதுர்யமாக செயல்பட வேண்டும்.
விருச்சிகம் :
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் சிறப்பாக திட்டமிட வேண்டும்.ஒரு முடிவை எடுக்கும் முன் பாதகம் ஏற்படாமல் இருக்க ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும், பெரியவர்களின் ஆலோசனையை கேப்ட்பது நல்லது.
தனுசு :
இன்றைய நாள் சற்றே அனுகூலமாக இருக்கும். அதிர்ஷ்டத்தை விட சுய முயற்சியை சார்ந்திருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மகரம் :
இன்று மிகவும் அனுகூலமான நாள். உங்கள் மனம் அமைதியாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
கும்பம் :
இன்று மிகவும் சிறப்பான நாள். நீங்கள் இன்று விரைந்து செயலாற்றுவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மீனம் :
இன்று திட்டமிட வேண்டியது அவசியம். மனதில் சில குழப்பங்கள் ஏற்படலாம். குழந்தைகளின் வளர்ச்சி குறித்த கவலை காணப்படும். எந்த காரியத்தையும் செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்