நாள்: 15.11.2022


நல்ல நேரம்:


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை






 

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

 

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை




இராகு:


மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


குளிகை:


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


எமகண்டம்:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


தொழிலில் சிறு சிறு மாற்றத்தை செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடையலாம். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல் அமையும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். மனை சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.


ரிஷபம்


எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நலம் நிறைந்த நாள்.


மிதுனம்


பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவுபெறும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் கவனத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.


கடகம்


மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மனதளவில் சில சஞ்சலங்கள் ஏற்படும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களில் கவனம் வேண்டும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். தனம் நிறைந்த நாள்.


சிம்மம்


கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் தீர்வு காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ள சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். திடீர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். உடனிப்பவர்களை பற்றிய புதிய கண்னோட்டம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.


கன்னி


மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.  மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.


துலாம்


உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் போட்டி தேர்வுகளை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும். பலதரப்பட்ட சிந்தனைகள் மனதில் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முதலீடுகள் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.


விருச்சிகம்


நீண்ட நாட்களாக தடைபட்ட தனவரவு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய எண்ணங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாகன பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய முயற்சிகள் ஈடேறும். போட்டி நிறைந்த நாள்.


தனுசு


அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் சில எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பொன், பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பொறுப்புகள் மேம்படும் நாள்.


மகரம்


குடும்பத்தில் தனவரவு தொடர்பான பிரச்சனைகள் குறையும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவேறும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த  செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் நிறைவேறும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். செலவுகள் நிறைந்த நாள்.


கும்பம்


பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தனவரவு எதிர்பார்த்த அளவில் இருந்தாலும் அதற்கு ஏற்ப செலவுகள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புக்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிறைவு நிறைந்த நாள்.


மீனம்


சகோதரர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். பிறமொழி பேசும் மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப லாபம் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.