நாள்: 14.09.2022


நல்ல நேரம் :


காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை


மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை


இராகு :


நண்பகல் 12.00 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை


குளிகை :


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


எமகண்டம் :


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். 


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வாகன பயணங்களின் போது தேவையான ஆவணங்களை எடுத்து செல்லவும். மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் ஏற்படும்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்து கொள்ளவும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சியில் இருந்துவந்த தடைகள் குறைந்து எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவீர்கள். 


கடகம் :


கடக ராசி நேயர்களே, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் ஆரம்ப கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். மனை சார்ந்த வியாபாரத்தில் லாபம் மேம்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். 


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு மேம்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். காசோலையால் ஏற்பட்ட சில பிரச்சனைகள் குறையும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் குழப்பம் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளால் தூக்கமின்மை உண்டாகும். கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். ஆடம்பரமான சிந்தனைகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். கணிதம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். சமூகம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். காப்பீடு சார்ந்த துறைகளில் வருமானம் மேம்படும்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் சாதகமாக அமையும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தேவையற்ற விவாதங்களை குறைத்து கொள்வது நல்லது. மற்றவர்களின் பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு காண்பீர்கள். குறும்படம் தொடர்பான முயற்சிகளில் வித்தியாசமான அனுபவம் ஏற்படும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். இன்ப சுற்றுலா தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும்.


மகரம் :


மகர ராசி நேயர்களே, வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். விவசாய பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மை நிலையை அறிந்து முடிவு எடுக்கவும். சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எந்தவொரு செயலையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். சிறு மற்றும் குறுந்தொழிலில் சாதகமான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும்.


மீனம்:


மீன ராசி நேயர்களே, புதிய அணுகுமுறையின் மூலம் எண்ணிய சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். கடன் சார்ந்த உதவி சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உங்களின் மீதுதான நம்பிக்கை அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும்.