ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா நட்சத்திராவை பார்த்து “உன்னால் கார்த்திக் சாரை நெருங்கக் கூட முடியாது” என சாவல் விட்ட நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தீபா வெளியில் சென்றிருந்த போது மகேஷின் அம்மாவை வேறொரு ஆணுடன் பார்க்க, அவரிடம் சென்று விசாரிக்க, அந்த நபர் “என்னுடைய மனைவி தான், நிறைய சீரியல்களில் நடித்திருக்காங்க” என்று சொல்ல தீபாவுக்கு சந்தேகம் வருகிறது.
இதனைத் தொடர்ந்து கணேசன் என்பவரை சந்தித்து உதவி கேட்கிறாள், அதாவது “என்னுடைய பிரண்ட்டோட கல்யாணத்துல ஒரு பிரச்னை, அதனால் எனக்கு உதவி பண்ணுங்க” எனப் பேசும் அவள் மூர்த்தியிடம் சென்று “ஒரு பையனுக்கு அப்பாவா நடிக்கணும், கல்யாணம் வரைக்கும் வந்து அந்த பொண்ணை பிடிக்கலனு சொல்லிடனும்” என்று சொல்கிறாள்.
அவரும் மூர்த்தியிடம் சென்று 5 லட்சம் தருவதாக சொல்லி நடித்து கொடுக்க சொல்கிறார். மகேஷூக்கு அப்பாவாக நடித்து சரியாக பணம் வராததை நினைத்து 5 லட்சத்துக்கு ஆசைப்பட்டு சம்மதிக்கிறார். இதையெல்லாம் போன் வழியாக தீபா கேட்டு கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக வீட்டில் கார்த்திக் டல்லாக உட்கார்ந்திருக்க தீபா என்னாச்சு என்று கேட்க, தலைவலி என்று சொல்கிறான். உடனே தீபா என்னிடம் ஒரு வைத்தியம் உள்ளது என்று சொல்லி கார்த்தியின் உள்ளங்கையை அழுத்தி விட, அவனுக்கு தலைவலி கொஞ்சம் குறையத் தொடங்குகிறது. கார்த்திக் காபி குடித்தால் இன்னும் பெட்டராக இருக்கும் என சொல்ல, தீபா தன்னுடைய ரூமில் காபி போட்டு வந்து கொடுக்கிறாள். இதனால் கார்த்திக் சந்தோஷப்படுகிறான்.
இப்படியான மகிழ்ச்சியான சூழலில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.