RasiPalan Today August 13: 


நாள்: 13.08.2023 - ஞாயிற்றுக்கிழமை


நல்ல நேரம் :


காலை 8.00 மணி முதல் காலை 9.00 மணி வரை


மதியம் 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை


இராகு :


மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை


குளிகை :


மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


எமகண்டம் :


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


சூலம் - மேற்கு


இன்றைய ராசிபலன்கள் 


மேஷம்


மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணிகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விருத்தி நிறைந்த நாள். 


ரிஷபம்


எதிலும் பொறுமையுடன் செயல்படுவதால் ஆதாயம் அதிகரிக்கும். எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடனிருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்தை வழி உறவுகளின் மூலம் அனுகூலம் ஏற்படும். வியாபார பணிகள் மத்திமமாக நடைபெறும். மனதளவில் புதிய தேடல் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.


மிதுனம்


முயற்சிகளில் கவனம் வேண்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்ப்புகளில் இருந்துவந்த தடைகள் விலகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். ஓய்வு வேண்டிய நாள்.


கடகம்


சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். குடும்ப விஷயங்களை  மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். எதிர்கால முதலீடுகளில் கவனம் வேண்டும். சிரமம் குறையும் நாள்.


சிம்மம்


ரகசியமான சில செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் பொறுப்புகள் குறையும். தம்பதிகளுக்கிடையே புரிதல் உண்டாகும். வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும். யாரையும் அலட்சியப்படுத்தி செயல்படுவதை தவிர்க்கவும். உடலில் ஒருவிதமான அசதி ஏற்பட்டு நீங்கும். லாபம் நிறைந்த நாள்.


கன்னி


விரும்பிய விஷயங்களை அடைவதற்கான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிர்கால சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் மதிப்பு மேம்படும். புதிய வியாபாரம் குறித்த ஆலோசனைகள் ஏற்படும். பொது காரியங்களில் ஒத்துழைப்பு கிடைக்கும். நட்பு நிறைந்த நாள்.


துலாம்


பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் உண்டாகும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகளுக்கு தேவையான உதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை சீரமைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் புதிய பதவிகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.


விருச்சிகம்


திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்ப்பாராத சில இடமாற்றம் நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.


தனுசு


திடீர் வாய்ப்புகளின் மூலம் மாற்றம் பிறக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். பணி சுமையினால் கோபம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத அலைச்சல்கள் அதிகரிக்கும். இயந்திர துறைகளில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.


மகரம்


நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். போட்டி, பொறாமைகள் குறையும். பொன், பொருள் வாங்கும் வாய்ப்புகள் அமையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பீர்கள். விருப்பமான உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். களிப்பு நிறைந்த நாள்.


கும்பம்


எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். திடீர் யோகங்களின் மூலம் மாற்றம் பிறக்கும். சோர்வு குறையும் நாள்.


மீனம்


கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தை விரிவு செய்வது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். பிறமொழி பேசும் மக்களின் உதவி கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.