நாள் - 12.08.2023 - சனிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 07.45 மணி முதல் காலை 08.45 மணி வரை
மாலை 04.45 மணி முதல் மாலை 05.45 மணி வரை
இராகு:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம்:
மதியம் 01.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
மேஷம்
உங்களின் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபாரம் நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களால் நினைத்தது நிறைவேறும். முயற்சிகளுக்கு உண்டான பலன் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
ரிஷபம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பேச்சுவார்த்தைகளால் சாதகமான சூழல் அமையும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பணி நிமிர்த்தமான சில பொறுப்புகள் குறையும். உழைப்பிற்கேற்ற பலன் தாமதமாக கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.
மிதுனம்
சவாலான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வியாபாரம் நிமிர்த்தமான குழப்பம் விலகும். சக ஊழியர்களால் நெருக்கடிகள் தோன்றி மறையும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். சபை பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். விருத்தி நிறைந்த நாள்.
கடகம்
குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
சிம்மம்
குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் மதிப்பு மேம்படும். சுபகாரியம் தொடர்பான நற்செய்திகள் கிடைக்கும். மறதி நிறைந்த நாள்.
கன்னி
சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் மனம் விட்டு பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உதவி கிடைக்கும் நாள்.
துலாம்
குடும்பத்தில் சிறு சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். நேர்மறையான சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்த சில செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். ஆதாயம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
நினைத்தது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். பணியில் மறைமுகமான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். வெளிப்படையான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். ஆவணம் இல்லாத பயணத்தை தவிர்க்கவும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.
தனுசு
சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். மனதளவில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை குறையும். உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
மகரம்
நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வாகன கடன் உதவிகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் மேம்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நலம் நிறைந்த நாள்.
கும்பம்
மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பிறமொழி பேசும் மக்கள் சாதகமாக இருப்பார்கள். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். கற்பனைத் திறனில் முன்னேற்றம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
மீனம்
திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் அமையும். பழமையான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.