நாள் - 11.08.2023 - வியாழக்கிழமை


நல்ல நேரம்:


காலை 09.15 மணி முதல் காலை 10.15 மணி வரை


இராகு:


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


குளிகை:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


எமகண்டம்:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


 


மேஷம்


பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள். திட்டமிட்ட சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளளவும். பணி நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுய முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உற்சாகம் நிறைந்த நாள்.


ரிஷபம்


குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனத்துடன் இருக்கவும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த  குழப்பம் குறையும். போட்டிகள் நிறைந்த நாள்.


மிதுனம்


உறவுகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன்களால் நெருக்கடிகள் ஏற்படும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். அலுவலகத்தில் மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். முயற்சிகளில் மாற்றமான முடிவு கிடைக்கும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். சாந்தம் வேண்டிய நாள்.


கடகம்


குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களால் மாற்றமான சூழல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். மனதளவில் தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். வித்தியாசமான மின்னணு பொருட்களை வாங்குவீர்கள். இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.


சிம்மம்


தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். புதிய வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். சேவை துறைகளில் இருப்போருக்கு மேன்மை ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.


கன்னி


நினைத்த பணிகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த  சிக்கல்கள் குறையும். மனதளவில் தெளிவு ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள். திருப்பணி சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.


துலாம்


மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும். புதிய நபர்களிடம் கவனத்துடன் செயல்படவும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.


விருச்சிகம்


வாழ்க்கைத் துணைவர் வழியில் மதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். விரயம் நிறைந்த நாள்.


தனுசு


திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். திட்டமிட்ட பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் விலகும். விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டாகும். கவலை குறையும் நாள்.


மகரம்


எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். பணி இடங்களில் மாறுதல் ஏற்படும். பழைய சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.


கும்பம்


தம்பதிகளுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். விருந்தினர்களின் வருகை ஏற்படும். மனதில் தெளிவு பிறக்கும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய அறிமுகம் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்ப்புகள் விலகும் நாள்.


மீனம்


உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் திருப்பங்கள் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.