நாள்: 10.04.2022


நல்ல நேரம் :


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை






 











மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை


இராகு :


மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை


குளிகை :


மதியம் 3 மணி முதல் மதியம் 4.30 மணி வரை


எமகண்டம் :


மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


சூலம் – மேற்கு


மேஷம் :


இன்று கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். நீங்கள் இதில் முழு ஆற்றலையும் செலுத்த வேண்டியிருக்கும். பொழுதுபோக்கிற்கென சிறிது நேரமே ஒதுக்க வேண்டியிருக்கும். நீங்கள் இன்று அமைதியாக இருக்கவேண்டும்.


ரிஷபம்:


இன்று நீங்கள் சௌகரியமாக உணர்வீர்கள். இனிமையான வார்த்தைகள் மூலம் நீங்கள் பலனடைவீர்கள். இதனால் உங்கள் தன்னம்பிக்கை வளரும்.


மிதுனம் :


இன்று உங்கள் மனதில் தெளிவு காணப்படும். இதனால் உங்கள் செயல்களை திறமையாக ஆற்றுவீர்கள். பொருத்தமான செயல்களை செய்து உங்கள் நிலையை மேம்படுத்துவீர்கள். இனிமையான வார்த்தைகள் உங்களுக்கு பல நல்ல பலன்களை அளிக்கும்.


கடகம் :


இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் அமைதியை உணர்வீர்கள். கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு கவலை அளிக்கும். இரவில் தூக்கமின்மை காணப்படும்.


சிம்மம்:


இன்று அதிருப்தியான நிலை காணப்படும். அனுசரணையான போக்கு உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். சிறந்த பலன் காண உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உங்கள் எதிர்காலத்திற்காக நீங்கள் திட்டமிட வேண்டும்.


கன்னி :


இன்று உங்களுக்கு சாதகமான நாள். பல வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நாளின் பலன்கள் உங்களுக்கு திருப்தி அளிக்கும்.


துலாம் :


இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.


விருச்சிகம் :


இன்று செயல்கள் சீராக நடக்க சாதகமாக இருக்காது. இன்று அதிக பொறுப்புகள் காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.


தனுசு :


இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. நீங்கள் சமநிலை இழப்பீர்கள். நற்பலன்கள் காண எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் இன்று சிறந்த பலன் அளிக்காது.


மகரம் :


இன்று சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். முக்கிய இலக்குகளை அடைய திட்டமிடலாம். நீங்கள் எதிர்பார்த்ததை விட இன்று அதிகம் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.


கும்பம்:


இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. அஜாக்கிரதை மற்றும் கவனமின்மை காரணமாக உங்களுக்கு வளர்ச்சி அளிக்கும் சில மதிப்பு மிக்க வாய்ப்புகளை இழப்பீர்கள்.


மீனம்:


இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. பதட்டமான சூழ்நிலை கவலை அளிக்கும். நீங்கள் சில தடைகளை சந்திப்பீர்கள். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். சிறந்த வளர்ச்சி காண திட்டமிட்டு செயல்பட வேண்டும்.




Also Read | Guru Peyarchi 2022: குருபெயர்ச்சியால் எந்த ராசிக்காரருக்கு கோடீஸ்வர யோகம்..? உங்களுக்கு என்ன பலன் தெரியுமா..?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண