நல்ல நேரம்:


காலை- 9:30 மணி முதல் 10:30 மணி வரை


மாலை- 4:30 மணி முதல் 5:30 மணி வரை



 


கெளரி நல்ல நேரம்









இரவு - 6:30 மணி முதல் 7:30 மணி வரை





ராகுகாலம்: 




பகல்-  12 மணி முதல் 1:30 மணி வரை


குளிகை:


பகல் 10:30 மணி முதல் 12 மணி வரை 


எம கண்டம்:


காலை 7:30  மணி முதல் 9 மணி வரை


சூலம், பரிகாரம்:


வடக்கு , பால்


சந்திராஷ்டமம்:


ரேவதி


இன்றைய ராசிபலன்கள்:


மேஷம்:


பிறரிடத்தில் இரக்க குணம் மேலோங்கும். அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நல்ல பண வரவு இருக்கும். குடும்பத்தாருடன் மகிழ்வாக காணப்படுவீர்கள். 


ரிஷபம்:


இன்றைய உங்கள் செயல்பாடுகள் உங்களை உயர்வான இடத்திற்கு கொண்டு செல்லும். உயர் அதிகாரிகள், சக பணியாளர்களின் பாராட்டை பெறுவீர்கள். எடுத்த காரியத்தை விரைந்து முடிப்பீர்கள். உடல் நலனில் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள். 


மிதுனம்:


பிறரிடத்தில் அன்பு காட்டும் சூழல் வரும். உங்களை தேடி வருவோருக்கு உதவிகள் செய்வீர்கள். உடன் பணிபுரிபவர்களுக்கு உங்கள் உதவிகள் தேவைப்படும். பிறர் மனம் புண்படும்படி பேசினால், அதை பொருட்படுத்த வேண்டாம்.


கடகம்: 


இன்று உங்கள் சுறுசுறுப்பு கடுமையாக பாதிக்கும். சோர்ந்து கணப்படுவீர்கள். பெற்றோர், குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்தவும். போக்குவரத்தில் அதிக கவனம் தேவை. வீண் மருத்துவ செலவுகள் வந்து சேரும். இறைவழிபாடு நன்மை பயக்கும்.


சிம்மம்:


கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தவிப்பீர்கள். தேவையற்ற அச்சங்கள் நெஞ்சில் குடியேறும். பிள்ளைகள் அன்பை பெறுவீர்கள். பழையவற்றை நினைத்து குழம்ப வேண்டாம். காரியத் தடை இருக்கும். கோயில் வழிபாடு மனதிருப்தி தரும். 


கன்னி:


புத்திகூர்மையோடு செயல்படுவீர்கள். உங்கள் விவேகத்தன்மையால், உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் பெரிய அளவில் பலன் கிடைக்கும். புதிய தொழிலுக்கான ஒப்பந்தங்கள், முயற்சிகள் வெற்றி பெறும். பெற்றோரிடத்தில் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.


துலாம்: 


வீண் கோபங்கள் குடியேறும். குடும்பத்தார், கணவர் அல்லது மனைவியிடம் அதிக கோபம் கொள்வீர்கள். அது மனக்கசப்பை ஏற்படுத்தலாம் . புரியாமல் நீங்கள் தவறுகளை சிறிது நேரம் சிந்தித்தால், அதை உணர்வீர்கள். பண சிக்கல் இருக்கும்.


விருச்சிகம்: 


மகிழ்வான தருணம் கிடைக்கும். எதிர்பார்த்தவை நடக்கும். இன்பம் சூழ்ந்து கொள்ளும். வாகன போக்குவரத்தில் ஏற்பட்ட சிரமங்கள் தீரும். போக்குவரத்தில் இன்னும் கவனம். மருத்துவ செலவுகள் வந்து போகும். கொடுக்கல், வாங்கலில் கொஞ்சம் கவனம் தேவை.


தனுசு:


பக்தி மேலோங்கும். புண்ணிய தலங்களுக்கு சென்று வர திட்டமிடுவீர்கள். குடும்பத்தார் அன்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவ முன்வருவார்கள். நீண்ட நாட்களாக காத்திருந்த காரியங்கள் கைகூடும். கடன் வாங்க போட்ட திட்டம், முன்வடிவம் பெறும். 


மகரம்: 


அனைத்திலும் சுபம் காணும் நாள். உங்கள் திட்டங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். கடந்த சில நாட்களாக எதிர்கொண்ட பிரச்சனைகள் தீரும். உறவினர் வழி தொல்லைகள் விலகும். பூர்வ சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. 


கும்பம்: 


பண தரவு, தன வரவு தாரளமாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் பிரச்சனைகள் தீரும். முடிந்தவரை மற்றவருக்கு ஜாமின் வழங்குவதை தவிர்த்துவிடுங்கள். பார்ஸ் பயன்பாட்டில் கவனம் தேவை. ஆன்லைன் பண விரையம் இருக்கலாம். சுயச் செலவுகள் வந்து போகும்.


மீனம்:


கொண்ட காரியத்தில் உறுதியாக இருப்பீர்கள். உடன் பணியாற்றுபவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிரிகள் தொல்லை தீரும். போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். தொலைதொடர்பு சிரமங்களை சந்திக்கலாம். பணம் எதிர்பார்த்த அளவு வராது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண