நல்ல நேரம்:
காலை- 9:30 மணி முதல் 10:30 மணி வரை
மாலை- 4:30 மணி முதல் 5:30 மணி வரை
கெளரி நல்லநேரம்:
இரவு - 6:30 மணி முதல் 7:30 மணி வரை
பகல்- 10:30மணி முதல் 12 மணி வரை
குளிகை:
பகல் 7:30 மணி முதல் 9 மணி வரை
எம கண்டம்:
மதியம் 3 மணி முதல் 4:30 மணி வரை
சூலம், பரிகாரம்:
மேற்கு , வெல்லம்
சந்திராஷ்டமம்:
திருவோணம்
இன்றைய ராசிபலன்கள்:
மேஷம்:
நண்பர்களுடன், உறவினர்களுடன் வீண் வாக்குவாதம் ஏற்பட்டு, அதுவே பகையாக மாற வாய்ப்புள்ளது. வீண் வம்பு வழக்குகளில் சிக்காமல் பாதுகாப்பாக இருங்கள். உங்கள் உயர்அதிகாரிகள் இடும் கட்டளையை தட்டாமல் நிறைவேற்றுங்கள்.
ரிஷபம்:
மனதில் ஒருவிதமான அச்சம் குடியேறும். குழந்தைகள் உடல்நலனை எண்ணி கவலை கொள்வீர்கள். மனைவி உடன் வாக்குவாதம் ஏற்படலாம். முதலீடுகள் சரியலாம். இருந்தும் அதிலிருந்து மீண்டு வரும் மனவலிமை தேடி வரும்.
மிதுனம்:
பண வரவு தாரளமாக இருக்கும். புதிய வாகனம், எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய முயற்சிகள் பெரிய அளவில் பலனளிக்கும். சகோதரர் வழி மனக்கசப்புகள் வரலாம். பெற்றோர் உங்களுக்கு அறிவுரை வழங்குவார்கள்.
கடகம்:
கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் தவிப்பீர்கள். ஒருவித பய உணர்வு உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்கும். கோயில் வழிபாடு, இறை வழிபாடு நோக்கி நகர்வீர்கள். நல்ல முயற்சி இருந்தும், வீண் பயத்தால் அதன் பலனை அனுபவிக்க முடியாமல் தவிப்பீர்கள்.
சிம்மம்:
இன்று எதற்கெடுத்தாலும் செலவு தான். ஒன்றுக்கு பலமுறை யோசித்து பணத்தை பயன்படுத்தவும். குழந்தைகள் வழி மருத்துவ செலவுகள் வரலாம்; ஆனால் பாதிப்பு இருக்காது. பணம் தராளமாக இருக்கும். ஆனால், செலவும் வரும். கோயில் வழிபாடு பலன் தரும்.
கன்னி:
இன்று பல நன்மைகளை சந்திக்கும் நாள். பெற்றோர் வழி பூர்வீக சொத்துக்கள் குறித்த மகிழ்ச்சியான செய்திகள் வரலாம். புதிய வாகனங்கள் வாங்க திட்டமிடலாம். புதிய பயணத்திட்டங்கள் போடுவீர்கள். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இன்றைய நாள் இருக்கும்.
துலாம்:
எதிர்பார்த்த ஆதாயம் வீடு தேடி வரும். நிலம், மனை, வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் நலனில் அக்கறை செலுத்தவும். குழந்தைகள் மீது அதிக கவனம் தேவை. வீண் மன குழப்பங்களை தூக்கி சுமக்க வேண்டாம். இறைவழிபாடு பலன் தரும்.
விருச்சிகம்:
ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து முடிப்பீர்கள். பிறருக்கான வேலையில் காட்டும் ஆர்வத்தை உங்கள் வேலையிலும் காட்டுவீர்கள். உங்கள் புதிய முயற்சிகள் கை மேல் பலன் தரும். புதிய வீடு வாங்கம் முயற்சிகள் வெற்றி பெறும்.
தனுசு:
இறை பக்தி மேலோங்கும். புண்ணிய, ஆன்மிக தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்த வாய்ப்புள்ளது. சித்தர்களின் ஜீவசமாதி பீடத்தில் வழிபாடு நடத்த நேரிடலாம். பண வரவு நன்றாக இருக்கும். வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. மகிழ்வான செய்திகள் வந்து சேரலாம்.
மகரம்:
கடும் கோபத்தை சந்திக்கும் நாள் இன்று. உங்கள் பணி மீதான ஆர்வத்தை புரிந்து கொள்ளாதவர்கள் மீது சினம் கொள்வீர்கள். முடிந்தவரை வீண் வார்த்தைகளை தவிர்க்கவும். குடும்பத்தார் அன்பு கிடைக்கும். சிறிய சிறிய வாக்குவாதங்கள் வந்து போகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம்.
கும்பம்:
செய்யும் பணிகளில், எடுக்கும் முயற்சிகளில் வீண் தாமதங்கள் ஏற்படும். இதனால் சிறிய அளவிலான மனஉளைச்சலை சந்திக்கலாம். திட்டமிட்ட பண வரவு இருக்காது. அதே நேரத்தில் செலவிலிருந்து தப்பிக்கலாம். இறை வழிபாடு பலன் தரும்.
மீனம்:
தொழிலில் நல்ல லாபகரமான நாள். எந்த முயற்சி எடுத்தாலும், அது பெரிய அளவில் பலன் தரும். நஷ்டத்திலிருந்து மீண்டு வருவீர்கள். முதலீடுகள் பயன் தரும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் வரலாம். வெளிநாடு, வெளிமாநிலங்கள் செல்ல வாய்ப்பு வரலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்