நல்ல நேரம்:


காலை- 6:30 மணி முதல் 7:30 மணி வரை


மாலை- 4:30 மணி முதல் 5:30 மணி வரை



கெளரி நல்ல நேரம்:


பகல் - 9:30 மணி முதல் 10:30 மணி வரை


இரவு - 7:30 மணி முதல் 8:30 மணி வரை


ராகுகாலம்: 


காலை- 7:30 மணி முதல் 9 மணி வரை


குளிகை:


மதியம் 1:30 மணி முதல் 3 மணி வரை 


எம கண்டம்:


பகல் 10:30 மணி முதல் 12 மணி வரை


சூலம், பரிகாரம்:


கிழக்கு , தயிர்


சந்திராஷ்டமம்:


கேட்டை


இன்றைய ராசிபலன்கள்:


மேஷம்:


வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமையும் உங்களைச் சேரும். கடின உழைப்புக்கு ஏற்ற பெருமை கிடைக்கும். குடும்பத்தாரிடம் அரவணைப்பாக இருக்கவும். உடல் நலனில் அக்கறை வேண்டும். 


ரிஷபம்:


தொழிலில் கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும். எளிதில் முடிய வேண்டியது  இழுத்தடித்துச் செல்லும். நஷ்டத்திலிருந்து தப்பித்து கொள்ளலாம். வாகன, போக்குவரத்தில் கட்டாயம் கவனம் தேவை. பண விவகாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கலாம்.


மிதுனம்:


வீண் விவாதங்களை தவிர்க்கவும். அவசர பயணம் ஏற்படலாம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. நண்பர்களை சந்திக்க நேரிடலாம். தொலைபேசி வழி தகவல்கள் பயத்தை ஏற்படுத்தலாம். கோயில் வழிபாடு பயன்தரும். 


கடகம்: 


நீண்ட நாள் குழப்பத்திற்கு தெளிவு கிடைக்கலாம். வீண் சந்தேகங்கள் தீரும். தொழில் போட்டிகள் விலகும். முடிந்த வரை சுயமாக சிந்தித்து செயல்படுங்கள். பெற்றோர், குடும்பத்தாரிடம் வீண் வாதங்களை தவிர்க்கவும். இறைவழிபாாட்டில் நாட்டம் பிறக்கும்.


சிம்மம்:


உங்கள் முடிவுகளுக்கு நண்பர்கள் அல்லது குடும்பத்தார், அல்லது அலுவலகத்தில் எதிர்ப்பு கிளம்பலாம். இன்று எதிர்ப்பவர்கள், நாளை அதையே பாராட்டும் நிலையும் ஏற்படலாம். வீண் கோபத்தை தவிர்க்கவும். உங்கள் பாசம், ப்ரியம் அங்கீகாரம் பெறும். 


கன்னி:


எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரும். எதையும் பெரிதாக எண்ண வேண்டாம். இயல்பாக இருப்பது நல்லது. பண விவகாரத்தில் அதிக கவனம் தேவை. தொழில் ரீதியான குழப்பங்கள் இருந்தால், நம்பிக்கையான நண்பர்களின் ஆலோசனையை கேட்கலாம். 


துலாம்: 


அனைவருடனும் நட்பாக பழகுவீர்கள். நல்லதை மட்டுமே நினைக்க தோன்றும் மனநிலையில் இருப்பீர்கள். இறைவழிபாடு எண்ணங்கள் தோன்றும். பழைய தோழர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.


விருச்சிகம்: 


கேட்டையில் சந்திராஷ்டமம் தொடர்கிறது. எனவே கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும். நிம்மதியான சூழலை உணர்வீர்கள். பணம் தொடர்பான குழப்பங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். வருவாயை பெருக்க தேவையான முயற்சிகள் எடுப்பீர்கள்.


தனுசு:


தொழிலில் லாபம் கொட்டும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். உடல்நலனில் முன்னேற்றம் இருக்கும். முதலீடு  விவகாரங்களில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கொஞ்சம் கவனம் வேண்டும். 


மகரம்: 


நீண்ட நாட்களாக குன்றியிருந்த உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுறுசுறுப்பாக செயல்பட தொடங்குவீர்கள். வீண் உளைச்சலை தவிர்க்கவும். திடீர் வெளியூர் பயணங்கள் வரலாம். புதிய ஒப்பந்தங்களுக்கான பேச்சு வார்த்தை தொடங்கப்படலாம். 


கும்பம்: 


பண வரவு அதிகம் இருக்கும். அதே அளவு கோபம், எரிச்சல் ஏற்படலாம். புதிய நட்புகள் கைகூடும்.  சகோதரர்கள் வழி நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாள் சொத்து பிரச்சனை முடிவுக்கு வரலாம். வெளியூர் பயணம் நன்மை தரலாம். 


மீனம்:


உடல் நலம் சுகம் காணும் நாள். குடும்பத்தாருடன் மகழ்வாக இன்றைய நாளை கடத்தவும். போக்குவரத்து பயணங்களில் கவனம் தேவை. பிக்பாக்கெட் தொந்தரவுகளை சந்திக்கலாம். மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டாம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண