நல்ல நேரம்:


காலை- 7:30 மணி முதல் 8:30 மணி வரை


மாலை- 4:30 மணி முதல் 5:30 மணி வரை


கெளரி நல்ல நேரம்:


பகல் - 1:30 மணி முதல் 2:30 மணி வரை


இரவு - 7:30 மணி முதல் 8:30 மணி வரை


ராகுகாலம்: 


காலை- 3 மணி முதல் 4:30 மணி வரை


குளிகை:


மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை 


எம கண்டம்:


பகல் 9 மணி முதல் 10:30 மணி வரை


சூலம், பரிகாரம்:


வடக்கு, பால்


சந்திராஷ்டமம்:


உத்திரம், ஹஸ்தம்


இன்றைய ராசிபலன்கள்:


மேஷம்:


நீண்ட நாள் நினைத்தவை, நெடு நாள் முயற்சித்தவை கைகூடும் நாள் இன்று. இன்றைய நாள் சாதனைக்கான நாள். குழப்பத்திற்கு பதில் கிடைக்கும். வீண் சந்தேகங்களை தவிர்க்கவும். குடும்பத்தாரிடம் அன்பாய் பழகுங்கள்.


ரிஷபம்:


கடந்த சில நாட்களாக இருந்த உடல்நலக்குறைபாடுகள் தீரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். தொழில் நல்ல விதமாக நகரும். கடன் பிரச்சனைகள் தீரும். 


மிதுனம்:


கிடைப்பது வைத்து நிறைவு காணுங்கள். இருப்பதை விட்டு பறப்பதை தேட வேண்டாம். பெற்றோர், உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வெளி உறவினர்கள் உதவி செய்ய முன்வருவார்கள். எதையும் தீர ஆராய்ந்து முடிவு செய்யவும்.


கடகம்: 


நன்மைகள் தேடி வரும். கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வீர்கள். தேடி வரும் உதவிகளை உதாசீனப்படுத்த வேண்டாம். செலவுகளில் கவனம் தேவை. வார்த்தைகளில் கவனம் தேவை. மனைவி, கணவருடன் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.


சிம்மம்:


வீண் கோபங்களை தவிர்த்து, நற்செயல்களில் எண்ணத்தை செலுத்துங்கள். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் மகிழ்ந்திருப்பீர்கள். நீண்ட நாள் பிரிந்தவர்களை சந்திக்கவும், பேசவும் வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகள் நலனில் இன்னும் அக்கறை செலுத்துங்கள்.


கன்னி:


விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பாங்கு மேலோங்கும். குடும்பத்தாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். போக்குவரத்தில் கவனம் தேவை. கோயில் வழிபாடு நன்மை தரும். கவன சிதறலை தவிர்ப்பது தொழிலுக்கு நல்லது. 


துலாம்: 


பதவி உயர்வு, பணி உயர்வு தேடி வரும். நல்ல வாய்ப்புகள் வந்தாலும், பின்னாலேயே பொறுப்பும் அதிகம் வரும். குடும்பத் தலைவர், குடும்பத் தலைவிகள் உடல் நலனில் அக்கறை வேண்டும். மருத்துவர்கள் ஆலோசனையில் மருந்துகள் எடுத்துக் கொள்ளவும். குழந்தைகள் மீது தனி அக்கறை வேண்டும்.


விருச்சிகம்: 


தொட்டதும் துலங்கும் நாள் இன்று. எதை நினைத்தீர்களோ அது நடக்கும். எது நடக்குமோ அதை சரியான பாதையில் எடுத்துச் செல்லுங்கள். செலவுகள் தவிர்க்க முடியாதது. பொறுமையாக பேசுங்கள். கோபத்தை தவிருங்கள். உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும். 


தனுசு:


இன்று நீங்கள் கவனமாக பிறரிடம் பேச வேண்டும். முடிந்தவரை அமைதி காப்பது நல்லது. தேவையற்ற இடங்களில் தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். அது நல்லதல்ல. குழந்தைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்தவும். மருத்துவர்கள் ஆலோசனையின்றி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டாம். 


மகரம்: 


நல்ல நன்மைகள் கூடி வரும் நாள். நல்லதே நடக்கும். சில நாட்களாக இருந்த உடல்நலக்கோளாறு சரியாகும். குழந்தைகள் பற்றிய கவலை தீரும். பெற்றோர் ஆரோக்கியம் பெறுவர். தொலைபேசி வழி நல்ல தகவல் வரும். நீண்ட நாள் எதிர்பார்த்த பாக்கிகள் வந்து சேரலாம். வாகன போக்குவரத்தில் கவனம் தேவை.


கும்பம்: 


பெரிய பாதிப்பு, சிறிதாய் மாறும். கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பம் விலகி, நிம்மதி கிடைக்கும். எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கலாம். உடல் நலனில் அதிக கவனம் செலுத்தவும். தள்ளிப் போன விசயங்கள் மீண்டும் தொடங்கப்படலாம். 


மீனம்:


வியாபாரத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும் நாள் இன்று. உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். நீங்கள் எடுத்த முடிவுக்கு பெற்றோரிடத்தில் ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் உங்கள் உத்தரவை பின்பற்றுவார்கள். மனைவி அல்லது கணவரிடம் சண்டை வேண்டாம். தூரத்து உறவுகள் திடீர் வரவு இருக்கலாம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண