Rahu Ketu Peyarchi 2022 Palangal: 2022ம் ஆண்டுக்கான ராகு- கேது பெயர்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. இதில், ராகு  ரிஷபத்தில் இருந்து மேஷ ராசிக்கும், கேது விருச்சிகத்தில் இருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறது. இதனால், ஒவ்வொரு ராசிக்கும் என்னென்ன பலன்கள்? மாற்றங்கள்? என்பதை கீழே விரிவாக காணலாம்.


மேஷம் :


மேஷ ராசிக்காரர்களே சின்னச்சின்ன விஷயங்களுக்கு கோபம் வரும். பயம் உண்டாகும். கணிப்புகளால் தேவையற்ற பதற்றம் உண்டாகும். ஏதாவது ஒரு சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால், உங்களது வேகம் முன்பைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்திருக்கும். இந்த வேகத்தை நல்ல விஷயத்திற்காக பயன்படுத்தினால் பிரமாதமாக இருக்கும். பேசும்போது கவனம் தேவை. நான்கைந்து பேர் முடிக்காத காரியங்களை நீங்கள் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். தோல் தொடர்பான உபாதை இருக்கும்.


ரிஷபம் :


ரிஷப ராசிக்காரர்களே ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டும். பன்முகத்திறமைகளை சரியாக பயன்படுத்த வேண்டும். வேலையில் எந்த தொந்தரவு இருந்தாலும் வேலையை விட்டுவிடக்கூடாது. புதிய வேலை கிடைக்கும் முன் இருக்கும் வேலையை விட்டால் வேலை கிடைப்பது கடினம். சில சிந்தனைகள் மனதை பாதிக்கும்.


மிதுனம் :


மிதுன ராசிக்காரர்களே சொந்த, பந்தங்களிடம் கவனமாக இருக்க வேண்டும். கூட்டுத்தொழிலில் மிகவும் கவனம் தேவை. கர்ப்பிணி பெண்கள் கூடுதல் கவனம் தேவை. குழந்தைகள் மீது அதிக கவனம் தேவை. இடமாற்றம் செய்வதற்கு முன்பு அதிக சிந்தனை தேவை. ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் தேவை. அஷ்டம சனி என்பதால் பொறுத்திருந்து காத்திருந்து சில காரியங்கள் செய்தால் வெற்றி நிச்சயம்.


கடகம் :


நல்ல விஷயங்களை நோக்கி பிரயாணம் செய்வீர்கள், பூர்வீக சொத்துக்கள் விவகாரத்தில் கை கூடும். இடம், மனை, பொருள் விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. தாயார் உடல்நலத்தில் அக்கறை தேவை. தொழில் ரீதியாக கூடுதல் கவனம் தேவை. எல்லா நன்மைகளும் உண்டு. அதே நேரத்தில் கவனம் தேவை.


சிம்மம் :


சிம்ம ராசிக்காரர்களே தொட்டதெல்லாம் வெற்றி பெறும். அதே நேரத்தில் ஒன்றுக்கு நூறு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம். மனசு கஷ்டங்கள் தீரும். குரு வழிபாடு அவசியம்.


கன்னி :


கன்னி ராசிக்காரர்களே நல்ல காரியங்கள் நடக்கும். திருமண காரியங்கள் நடக்கும். திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் இருக்கும். கவனமாக இருக்க வேண்டும். பேசும்போது கூடுதல் கவனம் தேவை. குடும்ப விவகாரத்தில் கவனம் தேவை. கன்னி ராசிக்கு வெற்றி உண்டு. கவன்ம தேவை.


துலாம் :


துலாம் ராசிக்காரர்களே தெய்வ பக்தி கூடும். உங்கள் வேலையை நீங்கள் செய்து கொண்டே இருங்கள். வீண் செலவுகள் இருக்கும். ஆலோசனைகள் பெறலாம். திருமண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. பிறர் ஆட்டத்திற்கு நாம் ஆடக்கூடாது. துலாம் ராசிக்கு கூடுதல் கவனம் தேவை.


விருச்சிகம் :


விருச்சிக ராசிக்காரர்களுக்கு சில காரியங்கள் நடக்கும். சில காரியங்கள் நடக்காது. மறைமுக எதிரிகள் அதிகம் இருப்பார்கள். மிகவும் கவனம் தேவை. மின் சாதனங்களில் கூடுதல் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு அனுகூலம் உண்டு. ஒவ்வொரு விஷயத்திலும் நன்று யோசித்து முடிவு செய்ய வேண்டும். விருச்சிக ராசிக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.


தனுசு :


பிறருக்காக வேலை செய்வதில் இனி நேரத்தை வீணடிக்கக்கூடாது. குழந்தைகள் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். குடும்பத்தில் சலசலப்பு இருக்கும். கடந்து போக வேண்டும். நண்பர்களுடனான பயணத்தில் கவனம் தேவை. இடமாற்றத்திற்கு 100 முறை சிந்திக்க வேண்டும். ரகசியங்கள் பாதுகாக்க வேண்டும்.


மகரம் :


மகர ராசிக்காரர்களே இடம், பொருள், வீடு, மனை பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். லாபங்கள் உண்டாகும். ஒன்றரை வருடத்திற்கு அக்கம்பக்கத்தினர் சிக்கல் ஏற்படும். தாயார் உடல்நலத்தில் அக்கறை தேவை. தொழிலில் சமயோஜிதமாக செயல்பட்டால் வெற்றியும், மிகப்பெரிய பலனும் உண்டு.


கும்பம் :


கும்ப ராசிக்காரர்களே நல்ல வேகம் உண்டு. ஆனாலும், ஒருவித பயம் உண்டு. சிந்தனை மிகவும் அதிகம். ஏராளமான சிந்தனைகள் மனதில் உண்டு. கோபத்தை கட்டுப்படுத்துங்கள். குரு பலமாக உள்ளது. சாந்தமாக பேசுவது பலன் உண்டு. தந்தை ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. வெற்றி உண்டு. கவனம் தேவை.


மீனம் :


மீன ராசிக்காரர்களே நல்ல பலன் உண்டு. உங்களுக்காக உழைக்கும் நேரம் கிடைக்கும. குடும்பத்தில் சில சலசலப்பு உண்டு. வேகமாக செயல்பட்டால் சம்பாத்தியம் அதிகரிக்கும். வேகமாக இருந்தால் அடுத்த ஒன்றரை வருடம் அற்புதமாக இருக்கும். பேசாமல் கவனியுங்கள். வருமானங்கள் கூடி வரும். சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உண்டு.



Also Read | Rahu Ketu Peyarchi Date and Time 2022-2023 ஆம் ஆண்டிற்கான ராகு கேது பெயர்ச்சி எப்போது? இதோ முழு விபரம்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண