கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும்.





இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது.  மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும்.  இதில் ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாக்களாகும். இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு மீனாட்சி சன்னதி முன் உள்ள கோவில் கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீனாட்சியம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.



 


இந்த திருவிழா வருகிற 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழா நடைபெறும் 10 நாட்களிலும் மீனாட்சியம்மன் வெள்ளி அன்னம், நந்தி, யானை, கிளி பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி காலை மாலை என இருவேளைகளிலும் ஆடி வீதிகளில் வலம் வர உள்ளனர். ஆடிமுளைக்கொட்டு திருவிழா தற்போது அரசு வீதித்துள்ள வழிகாட்டுதல், கொரானா கட்டுப்பாடுகள் படி விழா நடைபெறும் என திருக்கோயில் இணை ஆணையர் அருணாச்சலம் தெரிவித்திருந்தார். திருவிழா நாட்களில் மீனாட்சியம்மன் கோயில் சார்பில் தங்கரத உலா, உபய திருக்கல்யாண நிகழ்வுகளை பக்தர்கள் பதிவு செய்ய இயலாது என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 


 









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண