காதலில் சண்டைகள் என்பது சாதாரணம். அதாவது சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்குனு வடிவேலு கேட்குற மாதிரி. லைஃப்ல எல்லாருக்குமே காதல் வந்துருக்கும். ஆனால் அதுல அந்த காதலோடு சேர்ந்து காதலர்களும் வெற்றி பெற்றாங்களா இல்லையா என்பதும் ரொம்பவே முக்கியமான விஷயம். எல்லா காதலுமே ஒன் சைடா இருந்து டபுள் சைடா மாறுது, நல்லாவே லவ் போகுது. இவங்கதான் நம்ம லைஃப்னு நாம பெரும் நம்பிக்கையோட இருக்கும்போது, எப்படியோ வந்த சண்டையால எல்லாமே சுக்குநூறாகி, காதல் காணாம போயிடுது.  


எல்லா காதல்லயும் சண்டைகள் இருக்கு. அதுவும் ரொம்பவே இருக்கு. ஒருவருக்கு அர்த்தம் கெட்ட சண்டைனு தோனுற விஷயம். அவங்க காதலருக்கு ரொம்பவே முக்கியமான விஷயமா தோனலாம். இப்படியான சண்டைகள் தான் ரொம்பவே அதிகமா இருக்கும். இதெல்லாம் லவ்வுல சாதாரணம் தான். இந்த சண்டைகள சீக்கிரமே சரி செய்யற வழிய பாக்கறது தான் ரொம்பவே நல்ல விஷயம். அத விட்டுட்டு உங்க பக்கம் தான் நியாயம் இருக்குனு நின்னீங்கனா, லவ்வுக்கு அது செட் ஆகாது. எவ்வளவு சண்டை வந்தாலும், உங்களுக்கு எதிர நிக்கறது உங்க லவ்வர்னு மனுசுல வெச்சுக்காங்க. அவங்கள உங்க எதிரி மாதிரி நடத்த வேண்டாம். உங்கள அவங்க நல்லாவே  புரிஞ்சுக்கிட்டாலும், பார்க்கும் பார்வை வேற அப்பபடிங்கறத ஒத்துக்கங்க. சீக்கிரமே சமாதானம் ஆகி லவ்வ செலிஃப்ரேட் பண்ணுங்க. சண்டையிலயே சட்ட கிழியும் போது லவ்வுல நெறய சட்ட கிழியும், மண்ட உடையும்னு தெரியாமலா லவ்வுல இறங்கியிருப்பீங்க.. அப்படி இக்கட்டான சூழல கொஞ்சம் ரிலாக்ஸா கேண்டில் பண்ண உங்க ராசிகளுக்கு ஏத்த மாதிரி நாங்க லவ் ராசிபலன்களை இங்க பதிவிடறோம். நீங்களும் ரிலாக்ஸா படிங்க. 


 





மேஷம்


உங்கிட்ட இருக்க பேட் ஹேபிட் இது மட்டும் தான். சண்டை போடும்போது கொஞ்சம் கவனமா வார்த்தைகள பயன்படுத்துங்க. உங்ககூட சண்ட போடறது யாரோ உங்களுக்கு வேண்டாதவங்க இல்ல. உங்கள ஊனுருக உயிருருக காதலிக்கறவங்கனு புருஞ்சுக்காங்க. சமாதானம் செய்யறதவிட முக்கியம் கண்ணியமா நடத்துறது. புருஞ்சுக்காங்க. 


ரிஷபம்


நைட்டு என்ன பேசுனோம் ஏது பேசுனோம்னு மறந்து நீங்க யோசுச்சுட்டு இருக்கும்போது, வாட்ஸ் ஆப் போய் பாத்தா உங்க லவ்வர் உங்கள ப்ளாக் பண்ணி வெச்சுருப்பாங்க. இன்ஸ்டாகிராம்லயும் அதே நிலமைதான். வேற வழியே இல்ல ஜீ-பேல மெசேஜ் அனுப்புவீங்க. ஆனா உப்புசப்பு இல்லாத காரணமா அது இருக்கும். மொத்தத்துல சுமாரான நாள். 


மிதுனம்


ஹைவே-ல போற டவுன் பஸ் மாதிரி உங்க லவ் போய்ட்டு இருக்கும் போது, 'குறுக்க இந்த கௌசிக் வந்தா'
ங்கறமாதிரி உங்க ப்ரெண்டே உங்க ஆள உஷார் பண்ண பாப்பாங்க. கண் மூடித்தனமா எல்லாரையும் நம்பீட்டு இருக்காதீங்க. உங்க சைடு இன்னைக்கு அவ்வளவு வீக். 



கடகம்


ஒன் சைடு லவ்வுல இருக்க சுவாரஸ்யம் டபுள் சைடு லவ்வுல இல்லைனு நல்லா வசனம் பேசுவீங்க. ஆனா லவ்வ சொல்ல பயம் உங்களுக்கு. பயப்படாதீங்க தைரியமா போய் லவ்வ சொல்லுங்க. ஒரு மாதிரி சக்ஸஸ் ஃபுல் டே தான், ஆனா நீங்க சொதப்பிடுவீங்களோனு தோனுது.



சிம்மம்


உங்களாலயே நம்ப முடியாது. இன்னைக்கு உங்களுக்கு மெஜாரிட்டியா ஹேப்பி சர்ப்ரைஸஸ் நடக்க வாய்ப்புகள் அதிகம். உங்க லவ்வர் உங்கள லவ்வுல திக்குமுக்காடச் செய்யப்போறாங்க. ஹேப்பியான நாள். 



கன்னி


பொது சேவை செய்யறதுக்குன்னே பொறந்த வந்த ஸ்னேக் பாபு நான் தான்னு வசனம் பேசீட்டு  ஃப்ரெண்டுக்கு ஹெல்ப் பண்றேன்னு போன நீங்க, இன்னைக்கு லவ்வருக்கு ஒரு மெசேஜ் கூட  அனுப்பாம திட்டு வாங்குவீங்க. கடைசில ப்ரெண்டுக்கும் ஹெல்ப் பண்ண முடியாம லவ்வர்ட்டையும் திட்டு வாங்கீட்டு இருப்பீங்க. எது செஞ்சாலும் யோசுச்சு செய்ங்க. 



துலாம்


காதல பொறுத்த வரைக்கும் நம்பிக்கை ரொம்ப முக்கியம். உங்க லவ்வர் உங்கள நம்பறமாதிரி நீங்களும் அவங்கள நம்பனும். எதுவா இருந்தாலும் அவங்கிட்ட ஓபனா பேசிடுங்க. நீங்களா கேள்வி எழுதி, நீங்களா பதில் எழுதீட்டு இருக்காதீங்க.  இட்ஸ் நாட் குட் ஃபார் ரிலேஷன்ஷிப். அவங்க ஜர்ஜ் பண்ணாதீங்க. அது ரொம்பவே தப்பு. ஸ்டேபுலா இருங்க சரியா. நிதானம் அவசியம். 



விருச்சிகம்


சொந்தத்துல ஒரு வரன் இருந்துச்சே, அவங்க லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்கனு உங்க வீட்டுல கூப்டு சொல்லுவாங்க. உனக்குனு இருந்த கடைசி வரனும் போச்சு. நீ யாரையும் லவ் பண்றயானு கேப்பாங்க. ஆமானு சட்டுனு சொல்லிடுங்க. வீட்டுலயும் ஓ.கே சொல்லிடுவாங்க இதெல்லாம் நடந்தா எப்படி இருக்கும்.  இதெல்லாம் கனவுலதான் நடக்கும்னு நீங்க சொல்றதும் கேட்குது. இன்னைக்கு கொஞ்சம் ஏமாற்றமான நாள் உங்களுக்கு. 


தனுசு


உங்க பார்ட்னர்ட்ட இருந்து உங்களுக்கு ஏகப்பட்ட சப்போர்ட் கிடைக்கும். நீங்க நடு ராத்திரி கால் பண்ணி நான் சினிமாக்கு போலானு இருக்கேன்னு சொன்னா, சன்டே வரைக்கும் டிக்கெட்ஸ் கிடைக்காது. மன்டே வேனா போய்ட்டு வானு சொல்லுவாங்க. ஆனா நீங்க சீரியஸா சினிமால கெரியர் ஸ்டார்ட் பண்றேன் சொன்னாலும் இப்படி தான் ரியாக்ட் பண்ணுவாங்க. 



மகரம்


 உங்களுக்கு தெரியும் நேத்து போட்ட சண்டை இன்னும் திறலனு. ஆனாலும் காலையில எழுந்ததும் முதல் வேலையா உங்க ஆளுக்கு குட் மார்னிங்னு மெசேஜ் அனுப்புவீங்க. உங்கள நெனச்சா உங்களுக்கே பாவமா தெரியலாம். ஆனா நீங்க செம்மயான லவ் மெட்டீரியல்னு உங்க ஆள் உங்கள பாராட்டுவாங்க. 



கும்பம்


உங்களுக்கு எத்தன தடவதான் சொல்றது. எதுலயும அவசரபடாம இருங்கனு. பேசாம ஒரு நாளஞ்சு நாளைக்கு உங்க மொபைல் ப்ராப்ளம்னு சொல்லிட்டு வாட்ஸ் அப் இன்ஸ்டானு எதுக்குமே போகாம இருங்க. உங்களோட இப்போதைய பிரச்சனைக்கு இதுதான் தீர்வு. இப்பவும் சொல்றேன் தடுமாறாதீங்க அவசரபடாதீங்க. நிதானமா இருங்க. 



மீனம்


உங்களுக்கு இன்னைக்கு ஒரே அலைச்சலாதான் இருக்கும். உங்க ஆளுக்கும் உங்களுக்கும் வெட்டு குத்து நடக்க கூட வாய்ப்பு இருக்குனு கட்டம் சொல்லுது. ஜாலியா பேசி சந்தோஷமா இருக்க முயற்சி செய்யுங்க.