காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சதீஷ் (30). இவர் நடுவரப்பட்டு ஊராட்சியில் 7 - வது வார்டு உறுப்பினராக உள்ளார். இவர் அப்பகுதியில் தேர்தலுக்கு முன்பாகவே பிரபலமாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியில் நடைபெறும் சில சமூக விரோத செயல்கள் குறித்து காவல்துறையினருக்கு அவ்வப்போது சதீஷ் தகவல் கொடுத்து வந்ததாக தெரிகிறது.

 



இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரி என்கின்ற எஸ்தர் (45) என்பவர் டாஸ்மாக்கில் இருந்து , மது வகைகள் பீர் வகைகள் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டு வந்து, கடை மூடியிருக்கும் சமயங்களில் வீட்டில் வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து அவ்வப்பொழுது காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. லோகேஸ்வரி பாலியல் தொழிலும் ஈடுபட்டு வந்துள்ளார். குறிப்பாக அப்பகுதியில் இருக்கும் ரவுடிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு தன்னிடம் இருக்கும் பெண்களை அனுப்பி வைத்துள்ளார்.

 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, லோகேஸ்வரி கள்ள சந்தையில் மது விற்பது குறித்து,  சதீஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தொடர்ந்து லோகேஸ்வரி என்கின்ற எஸ்தருக்கு காவல்துறையினர் கள்ளச்சந்தையில் மதுவை விற்கவிடாமல் தடுக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் லோகேஸ்வரியின் வருமானம் பாதித்துள்ளது. 

 



இதனால் கடுப்பான லோகேஸ்வரி சதீஷை தன் வீட்டிற்கு அழைத்து சரமாரியாக தலையில், வெட்டி கேட்டிற்கு வெளியே கொண்டு வந்து போட்டுவிட்டு வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சோமங்கலம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளச் சந்தையில் மதுவிற்ற பெண்ணை தட்டி கேட்ட மக்கள் பிரதிநிதி ஒருவர் பட்டம் பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கும், சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 



 

 

 ஐந்து பேர் நீதிமன்றத்தில் சரண்

 

திமுக வார்டு உறுப்பினர் கொலை வழக்கில், லோகேஸ்வரி என்கிற எஸ்தர் உட்பட ஐந்து பேர் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்ததுள்ளனர்.

 

விபரம் :-

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நடுவீரப்பட்டு ஊராட்சி திமுக வார்டு உறுப்பினர் சதீஷ் கொலை வழக்கில்,

 

1.எட்டியாபுரம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரி என்கிற எஸ்தர் 38 ,

 

2.நல்லூர் பகுதியை சேர்ந்த நவமணி 28

 

3.புதுநல்லூர் பகுதியை சேர்ந்த சதீஷ் 31

 

4.கோழி என்கிற அன்பு 25

 

5.புதுநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் 37

 

ஆகிய ஐந்து பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.