ஜெய பார்வதி விரதம் இந்த ஆண்டு நேற்று தொடங்கியுள்ளது. இன்று காலை 7.46 மணி வரை நீடிக்கிறது. இந்த விரதம் ஏன் கடைபிடிக்கப்படுகிறது? இதை எப்படி இருக்க வேண்டும் என்ற பல்வேறு சுவாரஸ்ய தகவல்களைப் பார்ப்போம்.
சிவன், பார்வதிக்கு சமர்ப்பணம்:
ஜெய பார்வதி விரதம் சிவனையும், பார்வதியையும் பூஜித்து நடத்துவதாகும். இதனை விஜய விரதம் என்றும் அழைக்கின்றனர். இந்த விரதம் இந்து மதத்தினர் மேற்கொள்ளும் விரதங்களில் மிகவும் முக்கியமான விரதமாகக் கருதப்படுகிறது. இதை பெரும்பாலும் திருமணமான பெண்களே மேற்கொள்கின்றனர். திருமணமாகாத பெண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். ஆண்டு தோறும் இது ஆசாத மாதத்தில் த்ரியாதசி திதியில் சுக்ல பக்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு இது ஜூலை 11ஆம் தேதி வந்துள்ளது.
இந்நாளில் திருமணமாகாத பெண்கள், திருமணமான பெண்கள் மணலால் யானை ஒன்றை செய்கின்றனர். அதற்கு தொடர்ந்து 5 நாட்கள் பூக்களும், பழங்களும் படையலிடுகின்றனர். இந்நாளில் பார்வதி தேவியையும், சிவனையும் உருகி பூஜிக்கின்றனர். 5 நாட்களும் விரதம் இருக்க வேண்டும்.
விரதத்திற்கான சுபமுகூர்த்த நேரம்:
ஜெய பார்வதி விரதத்திற்கான சுபமுகூர்த்த நேரம் திங்கள் கிழமை காலை 11.13 மணிக்கு தொடங்கியது. இது நாளை ஜூலை 12 காலை 7.46 மணி வரை நீடிக்கும்.
செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை:
ஜெய பார்வதி விரத தினத்தில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் நடத்த வேண்டும். முதலில் குளித்து பூஜைக்கு தயாராக வேண்டும். போலேநாத் சிலையையும், பார்வதி அன்னையின் சிலையையும் முன்னால் வைக்க வேண்டும். சிலைக்கு குங்குமம், சந்தனம், மலர்கள், ரோலி பூச வேண்டும்.
பின்னர் தேங்காய், மாதுளை வைத்து பூஜை செய்ய வேண்டும். முதல் நாளில் தேங்காய், மாதுளை மிகவும் கட்டாயம். மற்ற நாட்களில் வேறு சில பழங்களும் வைக்கலாம். அன்றாடம் பூஜையில் தேங்காயும், மாதுளையும் இடம்பெறுவது சிறப்பு. பூஜையின் போது ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
5 நாட்களிலும் உணவில் உப்பு சேர்க்கவே கூடாது. காய்கறியும், தானியங்களும் சாப்பிடக் கூடாது. இனிப்பு வகைகள் அதுவும் பால் அல்லது பழத்தினால் செய்த இனிப்புகளை மட்டுமே உண்ண வேண்டும். பூஜை முடிந்தவுடன் கோதுமை ரொட்டி அல்லது பூரி மற்றும் காய்கறிகள் சாப்பிடலாம். பூஜை முடிந்த பின்னர் உண்ணும் உணவில் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
விரதத்தின் கடைசி நாளான 5வது நாளில் இரவு கண் விழித்திருக்க வேண்டும். மறுநாள் ஆற்றில் நீராடி சிவனையும் பார்வதியையும் பூஜிக்க எண்ணியது நிறைவேறும், குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். தீய வழியில் சென்ற கணவர் நல் வழிக்குத் திரும்புவர்.
இந்த விரதத்தை மேற்கொள்வதால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல கணவரும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.