அனுமனை விரதம் இருந்து வழிபட்டால், நாம் நினைத்தவைகள் நடக்கும்; சனி பகவானால் ஏற்படும் துன்பத்தை ஓரளவு குறைத்துக்கொள்ள நமக்கு வழிபிறக்கும் என்று நம்பப்படுகிறது.


அனுமன் வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன் என்று அழைக்கப்படுகிறார். எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அனுமன் அமைதியாக அமர்ந்து கொண்டிருப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கேசரி மைந்தன் ஆஞ்சநேயர் மார்கழி மாதம் அமாவாசை நாளில் மூலம் நட்சத்திர நாளில் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படும் இன்றைய தினத்தில் உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துகளை கூறி அனுமன் அருளையும் பகிந்துகொள்ளுங்கள்.


 


வாழ்த்து செய்திகள்:


 


அனுமனை வழிபட,


நினைத்ததெல்லாம் நிறைவேறிடும்.


அனுமன் அருளால் அனுதினமும்


நல்லதே நடந்திடும்.


அனுமன் ஜெயந்தி வாழ்த்துகள்


 


 


அனுமனை தரிசித்தால்!


சோகம் நீங்கி யோகம் வரும்.


சோம்பல் நீங்கி உற்சாகம் வரும்.


அனுமன் ஜெயந்தி வாழ்த்துகள்!


 


அனுமனின் வாழ்க்கை ஒவ்வொரு நெருக்கடியையும் எதிர்கொள்ள நமக்கு ஊக்கம் அளிக்கிறது. அவரின் அருளால் உங்கள் வாழ்வில் இருள் விலகட்டும். இனிய அனுமன் ஜெயந்தி வாழ்த்துகள்!


 


ஹனுமனின் பலத்தால், உங்கள் வாழ்க்கையில் துன்பங்கள் விலகட்டும். வாழ்வில் வெற்றி அடைய அனுமன் உங்களுக்கு அருளட்டும். இனிய அனுமன் ஜெயந்தி வாழ்த்துகள்!


 


உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய அனுமன் ஜெயந்தி வாழ்த்துகள்! அனுமன் ஆசீர்வாதத்தால் எதையும் தைரியமுடன் கடந்து வர வாழ்த்துகள்!


 


அனுமனை வணங்கி நலமுடனும் வளமுடனும் வாழ அனுமன் ஜெயந்தி வாழ்த்துகள்!


 


அனுமனின் அருளால் அனுதினமும் உங்கள் வாழ்வில் நல்லவைகள் மட்டுமே நடந்திட என் மனமார்ந்த வாழ்த்துகள்! இனிய அனுமன் ஜெயந்தி வாழ்த்துகள்!


 


அனுமனை வழிபடுங்கள்! தனம், தைரியம், தன்னம்பிக்கை எல்லாமும் உங்களுக்குக் கிட்டும். இனிய அனுமன் ஜெயந்தி வாழ்த்துகள்!


 


அனுமனின் அருளால் இனி வரும் நாட்கள், உங்கள் வாழ்வில் எல்லா வளங்களுடன் மகிழ்து வாழ வாழ்த்துக்கள்! இனிய அனுமன் ஜெயந்தி வாழ்த்துகள்!


 


அனுமன் காட்டிய வழியில் அன்பையும், நல்லெண்ணங்களையும் பரப்புவோம். இனிய அனுமன் ஜெயந்தி வாழ்த்துகள்!


 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண