அன்பார்ந்த வாசகர்களே! குரு கிரகத்தைப் பற்றி நமக்கு நன்றாக தெரிந்திருக்க வாய்ப்புண்டு. குரு பெயர்ச்சி என்றால் பெரிதாக பேசுவோம் குருவின் நகர்வை நாம் உன்னிப்பாக கவனிப்போம், குரு கிரகம் ஒரு மனிதனின் வாழ்வில் எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது என்பது நமக்கு நன்றாகவே தெரியும் . அதேபோல் சுக்கிரனை பற்றியும் தெரியும் ஒருவருக்கு நல்ல உச்சமான காலகட்டம் என்றால் “ உனக்கு என்னப்பா சுக்கிர திசை அடிச்சிருக்கு” என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு பணத்தைப் பற்றிய குறிக்கோளாக அல்லது குறியீடாக சுக்கிரன் இருக்கிறது .


இப்படி  குருவும் சுக்கிரனும் ஒரே வீட்டில் இருந்தால் என்ன மாதிரியான பலன்களை மனிதர்களுக்கு தரும் என்பதை பார்ப்போம். சுக்கிரன் செல்வத்திற்கு அதிபதி நன்றாக மாறிவிடு கார் வசதி வாய்ப்புகள் ஆடம்பரமான வாழ்க்கையை குறிப்பது சுக்கிரன் . குறைவில்லாத செல்வத்தையும்  ஆடம்பரமாக செலவு செய்வதையும் சுக்கிரன் குறிக்கும் . பணத்தை சேமிக்க முற்படாமல் சுக்கிரன் ஆதிக்கம் அதிகமாக கொண்டவர்கள் அதை ஆடம்பரமாக செலவு செய்ய முற்படுவார்கள் .


அதேபோல் குருவின் ஆதிக்கம் கொண்டவர்களோ கோடிக்கணக்கான பணத்தை குறிக்கும் ஒரு குறியீடாக அந்த கிரகத்தை பார்க்கலாம். காரணம் சுக்கிரன் லட்சங்களில் அல்லது ஒரு சில கோடிகளை குறித்தால் குரு பல நூறு கோடிகளை உடைய பணத்தை  குறிக்கிறார் . ஆகவே தான்  குருவை நாம் பொன்னவன் என்று அழைக்கிறோம் .


குருவும், சுக்கிரனும் ரிஷப ராசியில் இணைவது மிகப்பெரிய யோகத்தை கொண்டு வரும் என்று மூல நூல்கள் கூறுகின்றன . இப்படி குருவும் சுக்கிரனும் ரிஷப ராசியில் இணைவதால் எந்தெந்த ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் .


மேஷ ராசி :


மேஷ ராசி வாசகர்களுக்கு குரு சுப்பிர நினைவு ஒரு புதிய வாகனத்தை வாங்குவது அல்லது சுப காரியங்களுக்காக செலவு செய்வதையோ  குறிக்கும் . அதேபோல் புதிய பொருட்களை வீட்டிற்கு வாங்கி மகிழுங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் .


ரிஷப ராசி :


அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே! ராசியிலேயே குருவும் சுக்கிரனும் இணைகிறார்கள் . இந்த இணைவின் மூலமாக உங்களுக்கு பெயர் புகழ் மரியாதை அந்தஸ்து கௌரவம் சமுதாயத்தில் உயரப் போகிறது.


மிதுன ராசி :


மிதுன ராசியை பொறுத்தவரை  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் புதிய புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் . பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் வாழ்க்கை தரம் உயர போகிறது சுபச் செலவுகள் இருக்கலாம் .


கடக ராசி :


ராசிக்கு 11 ஆம் வீட்டில் குருவும் சுக்கிரனும் இணைவதால் நீங்கள் நினைக்கின்ற காரியத்தை விட நினைக்காத காரியங்கள் கூட உங்களுக்கு வெற்றியாக தான் முடியும் உங்களை விரிவாக பேசியவர்களுக்கு முன்பாக நீங்கள் தலை நிமிர்ந்து நடக்கப் போகிறீர்கள் வீட்டிற்கு ஒரு வாகனம் தாண்டி இரண்டு வாகனமும் வாங்க வாய்ப்பு உண்டு .


சிம்ம ராசி :


உங்களுடைய ராசிக்கு பத்தாம் பாவத்தில் குருவும் சுக்கிரனும் இணைவது தொழிலில் முன்னேற்றம்  வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் புதிய தொழில் தொடங்குவதன் மூலம்  பணவரவை அதிகரிக்க செய்தல் போன்ற நல்ல சுப காரியங்கள் நடைபெறும் .


கன்னி ராசி :


அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு 9 ஆம் வீட்டில் குருவும் சுக்கிரனும் இணைவது மிகப் பெரிய ஆன்மீக பலத்தை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும் . நடக்கவே நடக்காது என்று இருந்த காரியங்கள் கூட சுலபமாக நடைபெறும் சுப காரியங்கள் சுபச் செலவுகள் வீட்டில் இருக்கும் .


துலாம் ராசி :


அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு  எட்டாம் வீட்டில் குரு சுக்கிர  இணைவு  திடீர் அதிர்ஷ்டத்தையும் மிகப்பெரிய பணவரவையும் உங்களுக்கு கொண்டு வரும் இது நாள் வரை வசூல் ஆகாத பணங்கள் கூட உங்கள் கைகளுக்கு வந்து சேரும் .


விருச்சிக ராசி :


அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே! உருகும் சுக்கிரனும் ஏழாம் பாகத்தில் இணைவதால் திருமண பேச்சு வார்த்தைகள் விரைவில் முடிவு பெறும்  தேக ஆரோக்கியம் கூடும் முகத்தில் பொலிவு உண்டாகும் நினைத்தது நடக்கும் வாழ்த்துக்கள் .


தனுசு ராசி :


அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் ஒரு தொகையை வாங்கி மற்றொரு தொகையை அடைப்பீர்கள் நிதானமான தெளிவான வெற்றி உங்களுக்கு உண்டாகும் .


மகர ராசி :


அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு புத்திர ஸ்தானமான ஐந்தாம் பாவத்தில் குருவும் சுக்கிரனும் இணைவதால் குழந்தை பேரு உண்டாகுதல்  பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியடைதல் போன்ற நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம் அது மட்டும் இல்லாமல் ஒரு காரியத்தை நீங்கள் செய்வதன் மூலம் உங்களுக்கு பெயர் புகழ் கிடைக்கும் .


கும்ப ராசி :


அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு நான்காம் பாவகத்தில் குருவும் சுக்கிரனும் இணைவது வீடு மனை யோகம் உண்டாகும் புதிய வாகனம் வாங்கி மகிழுங்கள் ஏற்கனவே இருந்த பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்க வாய்ப்புண்டு அயல்நாடு  வேலை வாய்ப்புகள் உங்களுக்கு ஏற்படலாம் .


மீன ராசி :


அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு மூன்றாம் பாவகத்தில் உருவம் சுக்கிரனும் இணைவார்கள் முயற்சிகளில் வெற்றி எடுக்கக்கூடிய பாவமான மூன்றாம் பாவத்தில் குருவும் சுக்கிரனும் அமர்ந்து மிகப் பெரிய தைரிய யோகத்தை கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் நீங்கள் சொல்வதுதான் சட்டமாக மாறும் சமுதாயத்தின் மதிக்கப்படுவீர்கள் பணவரவு உண்டாகும் . உங்களுடைய பேச்சுக்கு மரியாதை கிடைக்கும் .