நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இலவச தரிசனத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் நாளை வரை தரிசனம் செய்யலாம். கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் ரூ.300 கட்டணத்தில் பக்தர்கள் வழக்கம்போல் தரிசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்களில் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணியும் நாளை முதல் நிறுத்தப்படும் என்றும் தேவஸ்தானம் கூறியுள்ளது.