தென் மாவட்டங்களில் சிறுதெய்வங்கள் வழிபாடு மிக முக்கியாமான ஒன்று. தங்களது குல தெய்வ வழிபாடை பயபக்தியாக கடைபிடிப்பார்கள். இதில் சில முக்கிய விழாக்களில் நூதன முறையில் தங்களது பாரம்பரிய பழக்கங்களை தொடர்ந்து கடைபிடிப்பது முக்கியமான ஒன்று. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமத்தினர் விவசாயத்திற்கு பயனாக இருக்கும் கண்மாய் மடையை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இதன் தொடர்சியாக இதற்கு திருவிழா எடுத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கறி விருந்து கொடுத்து கொண்டாடி உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ளது திருமலை கிராமம். இங்கு உள்ள கண்மாயில் விவசாய காலங்களில் தண்ணீர் திறக்கப்படும் மடையை இக்கிராம மக்கள் மடைக் கருப்பணசாமியாக நினைத்து வழிபாடு செய்வதுடன் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டும் பங்கேற்று கிடா வெட்டி திருவிழாவும் கொண்டாடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த இந்த திருவிழா இந்த ஆண்டு விதிமுறை தளர்வு காரணமாக நடைபெற்றது. இன்நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த திருவிழாவானது கொண்டாடப்பட்டது. இங்கு தங்களின் விருப்பத்தினை நினைத்து வேண்டி செல்வதும் பின்னர் வேண்டுதல் நிறைவேறினால் அதற்கு கருப்பு நிற ஆடுகளை மட்டும் மடைக்கருப்பண சாமிக்கு காணிக்கையாக வழங்குவது வழக்கம்.
இதில் இந்த ஆண்டு கிராமத்தினர் வேண்டுதல் நிறைவேறியதின் பலனாக 267 கருப்பு நிற ஆடுகளை வழங்கிய நிலையில் அதனை பலிகொடுத்து மடை கருப்பண சாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கிராமத்தினர் கெளலி வரம் கேட்டு அது கிடைத்த பின்னர் விருந்தும் வைத்தனர்.
இந்த விருந்தில் அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் மட்டுமில்லாமல் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆண்கள் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கிடா விருந்தை உண்டு மகிழ்ந்தனர். விவசாய காலம் முடிந்த பின்னர் மடையையே தங்களது தெய்வமாக கருதி கிடா வெட்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்று விருந்து உண்ணும் இந்த திருவிழா பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மேடையில் பேசும் போது கண் கலங்கி பேச்சை முடித்து கொண்ட திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் !