இதுவரைக்கும் ரெண்டு மூனு ப்ரேக் அப் பாத்துட்டேன். இனி நோ லவ் நோ பெய்ன்னு நீங்க நெனைக்கறீங்கனா நீங்க ஏதோ தப்பு செய்யறீங்கனு அர்த்தம். இன்னும் சொல்லப்போனா இயற்கைக்கு எதிரா இருக்கீங்கனு அர்த்தம். வாழ்க்கை எப்படி பயணபடுவதை கட்டாயம் ஆக்குதோ அதுமாதிரி தான் காதலும் பயணப்பட சொல்லும். அப்படி பயணப்படாம ஏதோ ஒரு இடத்துல தேங்கீடுவேன்னு நீங்க நினைக்கறீங்கன்னா, இயற்கைக்கு எதிரா மட்டும் இல்ல உங்களுக்கு எதிராகவும் நீங்க இருக்கீங்கனு அர்த்தம். குறிப்பா உங்க மகிழ்ச்சிக்கு, உங்க சந்தோஷத்துக்கு, உங்க வாழ்க்கைக்கு. நமக்கு முன்னாடி எத்தனையோ எதிரிகள் இருந்தாலும் நம்மலால அங்கள ஜெயிச்சிட முடியும். ஆனா நமக்கு எதிரா நாமலே இருக்கும் போது அங்க நடக்கறது பெரும் தவறு தான்.

மனச திறந்து வைங்க. ரொம்பவே இலகுவா வைங்க. குறிப்பா நீங்க செய்யவேண்டியது எல்லாம் இயல்பா இருக்கறது. உங்க மனச போட்டு குழப்பிக்காம இருங்க. லவ் அப்படிங்கற ஒரு அற்புதமான உணர்வு நம்மளோட கடைசி நிமிஷம் வரைக்கும் எக்கச்சக்க தடவ வரவேண்டியது. அதுலயும் குறிப்பா ஒரு பிரிவுக்கு பிறகோ அல்லது ஒரு முறிவுக்கு பிறகோ யாராலயும் உடனே மற்றொரு காதல் அப்படிங்கறத யோசுச்சு பாக்கவே முடியாது தான். ஆனா அதுக்காக அப்படியே இருந்திடவும் கூடாது. சின்னதா ஒரு ப்ரேக் எடுத்துகிட்ட அப்பறம், நீங்களே லவ்வ தேடி போகனும்னு அவசியம் இல்ல. இயற்கையாவே உங்களுக்கான லவ் ரொம்பச் சாதாரணமா நடந்திடும். அத வெல்கம் பண்ணுங்க. அக்சப்ட் பண்ணுங்க. அதுதான் இம்பாட்ர்டண்ட். அத தவற விடாதீங்க. இயற்கை எப்பவுமே அன்பானது தான். அதுக்காக வாய்ப்புகள அதிகப்படியா வழங்கக்கூடிய பழக்கம் இயற்கைட்ட கிடையாது. சோ... நீங்க ஜாலியா இருக்க லவ் பண்ணுங்க பாஸ்... அதுல உங்களுக்கு எதாவது சிக்கல்னா உங்க ராசிக்கான ஜாலியான லவ் ராசிபலன் நாங்க தர்றோம் நீங்க படுச்சு தெருஞ்சுக்காங்க. பட் கப்பு முக்கியம் பிகிலுனு சொல்ற மாதிரி லவ்வு முக்கியம்.


 



மேஷம் 


நீங்களும் உங்க ஆளும் சந்தோஷமா இருந்தத பாத்து உனக்கென்னப்பானு சொன்னவங்க எல்லாம் உனக்காப்பா இந்த நெலமனு பரிதாபமா பாப்பாங்க. அந்த அளவுக்கு உங்களுக்கும் உங்க ஆளுக்கும் இன்னைக்கு ஒரு தரமான சம்பவம் இருக்கு. பாவமான நாள். 



ரிஷபம்


வீக் எண்ட்ல அவுட்டிங் போலாம்னு எவ்வளவோ நாள் ப்ளேன் போட்டு சொதப்பி இருப்பீங்க. இந்த வீக் எண்டல ப்ளேனே இல்லாம அவுட்டிங் போக சான்ஸஸ் அதிகம். வெந்து தணிந்தது காடு ரிஷப ராசிகாரங்களுக்கு வணக்கத்த போடுனு சொல்ற மாதிரி மஜாவான வீக் எண்ட் உங்களுக்கு. 



மிதுனம் 


பெரும்பாலான தமிழ் சினிமாவுல காரணமே இல்லாம ஹீரோயின்ஸ் இருப்பாங்க, ஒரு சில படத்துல கதையே இல்லாம இருக்கும் அந்த மாதிரி இந்த வீக் எண்ட் உங்களுக்கு ஏன் வருது எதுக்கு வருதுனு உங்களுக்கும் தெரியாது. ஆனா நீங்க எதிர்கொண்டு தான் ஆகனும். ரெண்டு டேவுக்கான காலண்டர் பேப்பர நீங்க இப்பவே கிழுச்சாலும் அந்ததந்த டேட்ல கிழுச்சாலும் சேம் ரிஃப்லெக்ட் தான் உங்க லவ்வுல இருக்க போகுது. இட்ஸ் அ கன்ஃபியூஷன் வீக் எண்ட். 


கடகம்


உங்க லவ்வரோட நீங்க இன்னும் நெருக்கமாக அதிக வாய்ப்பு இருக்குனு கட்டம் சொல்லுது. கட்டம் சொல்றதவிட முக்கியம் உங்க மனசுல இருக்கறத அப்படியே நீங்க சொல்றது. ஈகோ வேண்டாம், தயக்கம் வேண்டாம். கோ அண்ட் டெல் வாட் யூ திங்க் எபவுட் யுவர் பார்ட்னர். ஆல்சோ வாட் யூ கேவ் டூ பீ. ரொமான்டிக் வீக் எண்ட். 


சிம்மம்


சிவாஜி படத்துல ரஜினி டயலாக் சொல்லுவாருல சிங்கம் சிங்கிளாதான் வரும்னு அந்தமாதிரி, நீங்க கமிட்டெட்டோ இல்லையோ மெஜாரிட்டி நீங்க சிங்கிள் மாதிரி தான் இந்த வீக் எண்ட்ல இருக்க போறீங்க. அதுவும் இந்த வீக் எண்ட்ல நடக்கற விசயங்கள் நெக்ஸ்ட் வீக்ல கண்டிப்பா ரிஃப்லெக்ட் ஆகும். 


கன்னி


உங்க ஆளோட நல்லாவே சண்ட போடுவீங்க. ஒன்னுமே இல்லாத விசயத்த நீங்களே ஊதி ஊதி பெருசாக்குவீங்க. வீக் எண்ட்ல என்ன செய்யனும்னு தெரியாம சண்ட போட்டுட்டு இருப்பீங்க. மரம் நட்டாவாச்சும் பூமிக்கு நல்லது அதையும் செய்யமாட்டீங்க. உங்களுக்கு டபள்யூ டபள்யூ ஈஈ வீக் எண்ட் தான். 



துலாம் 


நீங்களும் உங்க லவ்வரும் அவுட்டிங் போறேன்னு ப்ரெண்ட் கிட்ட சொன்னா நாடோடிகள் படத்துல வர்ற மாதிரி கையில கழுத்துல கெடக்கறத கூட கழட்டி தரேன்னு சொல்லுவாங்க. அத கொண்டு போயிருந்தா அம்மஞ்ஜல்லிக்கு பிரயோஜனம் இல்ல. உங்க வீக் எண்ட் நல்லா போககூடாதுனு நெனக்க மாட்டாங்க. ஆனா அவங்க செய்யறது எல்லாம் அப்படித்தான் இருக்கும். எல்லாம் விதி. 



விருச்சிகம்


நீங்க உங்க ஃப்லீடுல எவ்வளவு டேலண்டேட்னு உங்க ஆளுக்கு தெருஞ்சாலும், உங்கள கலாய்க்க கம்பு சுத்தவே தெரியாதவங்க மாஸ்டர்னு சொல்ற டயலாக்க ரிங்டோனா செட் பண்ணியிருப்பாங்க. உங்கள டேமேஜ் செஞ்சுட்டே இருப்பாங்க. உங்க வீக் எண்டும் அப்படித்தான் ஃபுல் டேமேஜ் வீக் எண்ட். 



தனுசு 


ஒன் சைடு லவ்வர்ஸ்க்கு நல்ல நல்ல  ஐடியாவா தருவீங்க. அதேமாதிரி ப்ரேக்அப் ஆனவங்களுக்கு ஓவர்கம் ஆக அட்வய்ஸ்சும் தருவீங்க. எல்லாரும் நீங்க ஏன் லவ் பண்ண கூடாதுனு யாராவது கேட்டா கோச்சஸ் வுட் நாட் ப்ளே த மேட்ச்னு சொல்லீட்டு, கெத்து காட்டீட்டு அழுவுறனே பாட்ட ரிப்பீட் மோட்ல கேட்டுட்டு இருப்பீங்க. 



மகரம்


ஹரி படத்துல வர்ற ஸ்கீரீன் ப்ளேல ஏன் ஸ்பீடு எதுக்கு ஸ்பீடுனு ஆடியன்ஸ்க்கு தெரியாத மாதிரி உங்க வீக் எண்ட்ல ஏகப்பட்ட சேஞ்சஸ் இருக்க வாய்புகள் அதிகம். பட் ஃபைனலா ஹேப்பி எண்டிங்கா இருக்கும். 


கும்பம்


ஊரே உங்கள கழுவி ஊத்துனாலும் உங்க லவ்வர் உங்கள தலமேல வெச்சு கொண்டாடுவாங்க. குத்தால அருவியில குளுச்சது போல் இருக்குதானு சொல்ற மாதிரி உள்ளுக்குள்ள ஐஸ் வெச்சா மாதிரி இருக்கும். லவ்வரால்  பாராட்டப்படுவீர். 



மீனம் 


கோயிலுக்கு சைட் அடிக்க போறவங்க இல்ல 90'ஸ் கிட்ஸ், பொங்கல் வாங்கி சாப்பட போறவங்க தான் 90'ஸ் கிட்ஸ்னு வசனம் பேசீட்டு இருப்பீங்க. உங்க ஜூனியர்க்கு எல்லாம் லவ்வு செட்டாகி கப்புள்ஸா இருப்பாங்க. பாவம் நீங்க கப்புளா இருந்தாலும் சிங்கிள் மாதிரி இருப்பீங்க. ஒன் மோர் ஷேட் வீக் எண்ட்.