Ayodhya Ram Mandir: மேஷ லக்னத்தில் பிரதிஷ்டை செய்யப்பட போகும் அயோத்தி ஸ்ரீராமர் - சாதகமா ? பாதகமா ?

Ayodhya Ram Mandir Opening: கடக ராசி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த ஸ்ரீ ராமர்  ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரத்தில் அயோத்தியில் தற்போது பிரதிஷ்டை செய்யப்படுகிறார். 

Continues below advertisement

கடக ராசி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த ஸ்ரீ ராமர்  ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரத்தில் அயோத்தியில் தற்போது பிரதிஷ்டை செய்யப்படுகிறார்.  ஒரு ஜாதகம் எப்பொழுது வேலை செய்யும் என்றால் ஒரு குழந்தை பிறந்த நொடி முதல் அந்த குழந்தையின் ஜாதகம்  வேலை செய்ய ஆரம்பித்து விடும். அதுவே அந்த குழந்தை வளர்ந்து முதிர் வயதாகி  இறந்த தருவாயில் அந்த ஜாதகம் அதோடு முடிந்து விடும். ஆனால் பூலோகத்தில் பிறக்கின்ற தெய்வ ஜாதகங்கள் அந்த நிலையின் கீழ் வராது.  உதாரணத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீராமர்  போன்ற தெய்வ ஜாதகங்கள் மக்களுக்காக  தேவலோகத்தில் இருந்து பூலோகத்திற்கு இறங்கி வந்து  அருட் கடாட்சம் புரிந்து  பிறகு தெய்வமாக மாறியது.  இந்த நிலையில் ஸ்ரீ ராமர் பூமிக்கு அவதரித்த நாள்  நட்சத்திரத்தில் ஏழாவது நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்தில் தான். 

Continues below advertisement

ஸ்ரீ ராமர் அவதரித்த புனர்பூச நட்சத்திரம் :

புனர்பூச நட்சத்திரம் குருவினுடைய அருளை பெற்றது.  12 ராசி கட்டங்களில் 27 நட்சத்திரங்களுக்கும் ஒன்பது கிரகங்களினுடைய தாக்கம் உள்ளது  அந்த வகையில் ஸ்ரீ ராமர் அவதரித்த புனர்பூச நட்சத்திரத்திற்கு குருவினுடைய அருள் உள்ளது  குருவினுடைய சொந்த நட்சத்திரத்தில் பிறந்த ஸ்ரீ ராமர் இந்த பூலோகத்திற்கே குருவாய் திகழ்ந்தது  பூமியில் அவர் செய்த  திருவிளையாடல்கள் அனைத்தும்  மக்களின் நன்மைக்கே.  அயோத்தியில்  அருள் பாலிக்க போகும் ஸ்ரீ ராமர்  மிருக சீரிட நட்சத்திரத்தில் நமக்கெல்லாம் காட்சி தரப் போகிறார்.  புனர்பூச நட்சத்திரம் குருவின் உடைய நட்சத்திரமாக  இருக்கும் பட்சத்தில்.  மிருகசீரிட நட்சத்திரம் செவ்வாயினுடைய நட்சத்திரமாக இருக்கிறது.  செவ்வாய் பகவானும் குருவினுடைய வீட்டில் தான் அமர்ந்திருக்கிறார்.  கிட்டத்தட்ட இன்றைய தினம் ஒரு சுப தினமாகவே பார்க்கப்படுகிறது.

ரிஷப ராசியில்  உச்சமடையும் சந்திரன் :

ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரம் தற்போது வானத்தில் போய்க் கொண்டிருக்கும் சமயத்தில் அயோத்திய ஸ்ரீ ராமருடைய  கோயில் பிரதிஷ்டை நடைபெறுகிறது.  கடக ராசியில் சந்திரன் ஆட்சியாய் பிறந்த ஸ்ரீ ராமர் தற்போது அயோத்தியில் பிரசவத்தில் உச்ச சந்திரனாய் நமக்கு அருள்பாலிக்க போகிறார் .  கடகம் என்றாலே தாயுள்ளம் கொண்ட ஒரு ராசி.  ரிஷபம் என்றால் அதைவிட ஒரு படி மேலே என்று தான் கூற வேண்டும்.  ஏனென்றால் ரிஷப ராசியில் சந்திரன் உச்சத்தில் இருக்கிறார்.  அயோத்தியில் அருள்பாலிக்க போகும் ஸ்ரீ ராமர் நமக்கெல்லாம் தாய் உள்ளம் கொண்டவராக  நம்முடைய கஷ்டங்களை போக்குவராக, நமக்கெல்லாம் வழிகாட்டியாக குருவாக நம்முடைய பாவங்களை நீக்குபவராக,  வாழ்க்கையில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் குருவாக திகழப் போகிறார்.

மேஷ லக்னத்தில் பிரதிஷ்டை செய்யப்பட போகும் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் :

மேஷ லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சந்திரன் உச்சம் பெறுகிறது. மேஷ லக்னம் செவ்வாயினுடைய  லக்னமாக பார்க்கப்படுகிறது.  செவ்வாய் ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் உட்பட்ட  மிக பிரம்மாண்டமான கிரகம்.  அப்படி என்றால் அயோத்தியின் ஸ்ரீ ராமர் கோவில் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் எடுத்துக்காட்டாய் விளங்கப் போகிறது.  எப்படி ஒரு நாட்டை ஆள வேண்டும் எப்படி ஒரு வீட்டை ஆள வேண்டும் எப்படி ஒரு நிர்வாகத்தை ஆள வேண்டும் என்று ஆட்சி பொறுப்பில் உள்ளவர்களுக்கு  ஒரு குருவாக திகழப் போகிறார் அயோத்தியின் ஸ்ரீ ராமர்.  எதிர்கால இந்தியாவில் அயோத்தியின் ஸ்ரீ ராமர் புகைப்படம் தான் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் இருக்க வாய்ப்புள்ளது.  மேஷ லக்னம் நிர்வாக லக்னம்,  அரசு அரசு சார்ந்த விஷயங்கள் அதிகாரப் பதவியில் உள்ளவர்கள.  நாட்டை ஆளுபவர்கள் மாநிலத்தை ஆளுபவர்கள் என்று  அத்தனை பேரையும் குறிக்கும் ஒரு பிரம்மாண்ட லக்னம் தான் மேஷ லக்னம்.  இப்படிப்பட்ட மேஷ லக்னத்தில் பிரதிஷ்டியாக போகும் ஸ்ரீ ராமரும்  நாட்டையே ஆள்பவராக திகழப் போகிறார்.  இப்பேற்பட்ட ஸ்ரீ ராமரின் அருளை நாம்  பெறுவது நமக்கு இந்த ஜென்மத்தில் நாம் செய்த புண்ணியமாக இருக்கும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola