ராசிகளும் அதன் பலன்களும்

மேஷம்:

யோகம் வேகமாகும். புதிய காரியங்கள் செய்யலாம். முயற்சிகள் சாத்தியமாகும். இடைவிடாது முயற்சிகள் செய்யவும்

ரிஷபம்:

காரிய தடங்கள் வருவது போல் தோன்றினாலும் அவற்றை சமாளித்துவிடுவீர்கள். பயணங்கள் பலன் தரும். தகவல் மூலம் தன வரவு கொட்டும்

மிதுனம்:

விருந்து, விழாக்களுக்கு செல்லலாம். வழக்குகள் சாதகமாகும். புதிய வாகன யோகம் ஏற்படும். பெற்றோர் வகையில் மருத்து செலவுகள் உண்டாகலாம். 

கடகம்:

புகழ் கூடும் நாள் இன்று. சில காரியங்களை சிந்தித்து செயல்படுத்துங்கள். உறவுகள் வழி மருத்துவ செலவு ஏற்படாலம். 

சிம்மம்:

ஓய்வு கிடைக்கும். மன நிம்மதி கிடைக்கும். பயணங்களை குறைக்கவும். பேச்சில் நிதானம் தேவை. சிறு, குறு வியாபாரிகள் கூடுதல் லாபம் பெறலாம்.

கன்னி:

உதவிகள் சாத்தியமாகும். இழந்த பலன்களை திரும்ப பெறலாம். பெண்கள் வழியில் கவனம் தேவை. பேச்சில் அதிக கவனம் தேவை

துலாம்:

எதிர்ப்புகள் வரும் ஆனால் அதை சமாளிப்பீர்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அது சங்கடத்தை தரலாம். தூர பயண வாய்ப்புகள் வரும். அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  

விருச்சிகம்:

மனதில் பயம் இருக்கும். பொறுமையாக காய் நகர்த்துங்கள். உற்பத்தி பொருட்களுக்கு சந்தையில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான தரத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். 

தனுசு:

காரிய வெற்றி கை கூடும். உடல்நலம் சீராகும். வயிறு , குடல் தொடர்பான பிரச்னை ஏற்படலாம். காரம் சேர்ப்பதை குறைக்கவும். உடல் நலனில் அக்கறை தேவை. 

மகரம்: 

துன்பமான சூழல் ஏற்படும். ஆனால் அதையும் மாற்றிக் கொள்வீர்கள். இழந்த பதவிகளை மீண்டும் பெறக் கூடிய வாய்ப்பு வரும். வாகன யோகம் இருப்பதால் இன்று புதிய வாகனங்கள் வாங்கலாம்.

கும்பம்:

அன்போடு செயல்படுவீர்கள். அதை நேரத்தில் அன்பாக இருந்தாலும் அதை அளவோடு காட்டுங்கள். வெற்றி வாய்ப்புகளை குவிக்கலாம். வரும் வாய்ப்புகளை வளம் பெற மாற்றிக் கொள்ளுங்கள். 

 

மீனம்:

பல உண்மைகள் இன்று தெரியவரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படலாம். அதற்காக வருத்தப்படுவீர்கள். அதே நேரத்தில் அன்புக்குறியவர்கள் சந்திப்பு நடைபெறும்.