மூத்த இயக்குநரும் தயாரிப்பாளருமான திரு. எஸ்.பி.முத்துராமன் தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்த நிலையில் அவருக்கு கோவிட் பாதிப்பு இருக்குமென சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.


<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Get well Soon! <a >pic.twitter.com/v0FFjecnF4</a></p>&mdash; Sonia Arunkumar (@rajakumaari) <a >April 8, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


1972-ஆம் ஆண்டு வெளியான கணிமுத்து பாபா என்ற படத்தின் முலம் தான் இவர் இயக்குநராக களமிறங்கினர். ஆடுபுலி ஆட்டம் தொடங்கி பாண்டியன் வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ராம்கி நடிப்பில் வெளியான தொட்டில் குழந்தை.