கரூர் மாவட்டம் மத்தியில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ரகுமாய் சமேத ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் இன்று ஆஷாட ஏகாதேசி விழாவை முன்னிட்டு கருவறைக்குள் சென்று பக்தர்கள் பகவானை தரிசிக்க அனுமதிக்க பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஆனி அல்லது ஆடி மாத ஏகாதசியில் பக்தர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டு பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்துவந்தனர்.
கரூர் ஸ்ரீ ரகுமாய் சமேத ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் மூலவர் சுவாமியை ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தொட்டுத் தழுவி தாங்கள் கொண்டு வந்த உதிரிப்பூக்கள் அர்ச்சனை செய்து மனதார பகவானே செய்வித்தனர்.
பின்னர் ஆலயத்தில் உள்ள பரிவார தெய்வங்களான ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சங்கர விநாயகர் மற்றும் உற்சவர் ஸ்ரீ ரகுமாய் சமேத பண்டரிநாதன் ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ,அதைத் தொடர்ந்து வண்ணம் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தனர். ஆலய மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ ரகுமாய் சமேத பண்டரிநாதன் சுவாமியை கொலுவிருக்க செய்தனர்.
அதைத் தொடர்ந்து ,பக்தர்கள் அனைவரும் ஆலயம் வலம் வந்த பிறகு உற்சவர் ஸ்ரீ ரகுமாய் சமேத பண்டரிநாதன் சுவாமியை மனதார வணங்கி சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் துளசி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ ரகுமாய் சமேத பண்டரிநாதன் ஆலயத்தில் நடைபெற்ற கருவறைக்குள் சென்று பக்தர்கள் பகவானை தரிசிக்கும் நிகழ்ச்சிக்கு கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள்ஆலயம் வருகைதந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.நிகழ்ச்சியில் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ ரகுமாய் சமேத பண்டரிநாதன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து, கரூர் ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் ஆடி மாத ஏகாதசி விழா பக்தர்கள் பஜனை பாடலுடன் கொண்டாட்டம்
கரூர் மாவட்டம், இனாம் கரூர், வெங்கமேடு பகுதி புது குளத்துப்பாளையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் ஆடிமாத ஏகாதேசி விழாவை முன்னிட்டு ஆலயத்திலுள்ள மூலவர் ருக்மணி சமேத பண்டரிநாதன்க்கும் ,உற்சவர் சிலைகளுக்கும், ஆஞ்சநேயர், விநாயகர், ஆண்டாள் மற்றும் கருடாழ்வார் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, அதைத் தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலய மண்டபத்தில் ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி விழா சிறப்பாக நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, ஆலயத்தின் பட்டாச்சாரியார் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அதைத்தொடர்ந்து துளசியால் அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பண்டரிநாதன் சுவாமிகளுக்கு நாமாவளிகள் கூறினார். அதைத் தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, மகா தீபாரதனை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பண்டரிநாதன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.