திருவாதிரையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கடலங்குடி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கச்ச பரமேஸ்வர ஆலயம் அமைந்துள்ளது.

  


NLC ல் ரூ.1 லட்ச சம்பளத்துடன் 238 காலிப்பணியிடங்கள்: யார் யார் விண்ணப்பிக்கலாம்? விபரம் இதோ!




இக்கோயிலில் கடந்த 17-ஆம் தேதி திருவாதிரை திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து கோவிலில் தினமும் சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை ஆகியவை நடைபெற்று வந்தது.   திருவாதிரை திருநாளை முன்னிட்டு இன்று காலை ஆருத்ரா தரிசனம் விமரிசையாக தொடங்கி நடைபெற்றது. 


16 நாள் ஆப்சென்ட்...’ -மோடியின் வருகை பதிவு போர்டுடன் அவைக்கு சென்ற மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த்!




மயிலாடுதுறையில் மதுப்பிரியர்களுக்கு இடையே மோதல் - மண்டை உண்டைந்து மருத்துவமனையில் அனுமதி


ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று காலை  சன்னதி திறக்கப்பட்டு அருள்மிகு ஸ்ரீ கச்ச பரமேஸ்வருக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், சர்க்கரை, தேன், திரவியம், இளநீர், பழவகைகள் உள்ளிட்ட ஆபிஷேச பொருட்கள் கொண்டு சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திராட்சை மாலை, நகைகள், உத்திராட்சமாலை, வண்ணமலர் மாலைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க மேளதாளம் இசைக்க மகாதீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது.


தேனியில் ஆபத்தான நிலையில் 95 பள்ளி கட்டடங்கள் - உடனடியாக இடிக்க ஆட்சியர் உத்தரவு




Watch video | ‛அந்த பாடலை முதலில் நான் நிராகரித்தேன்’ - ஓ... சொல்றீயா பாடல் குறித்து மனம் திறந்த சமந்தா!


இந்நிலையில்  பெண்கள் உதவியால்  இந்த திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் இந்தக் கோயிலில் பெண்களுக்கென தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடராஜர் சிலைக்கு மாலைகள் அணிவித்து தீபாராதனை காட்டி வழிபாட்டிற்கு வந்த பெண்கள் நடராஜ பெருமானை பல்லக்கை தூக்கி கொண்டு கோவிலில் பிரகாரங்களில் ஊர்வலமாக வளம் வந்தனர். மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் இந்நிகழ்வில் பங்கு கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் மட்டுமே சுவாமி சிலையை பல்லக்கில் வைத்து ஊர்வலமாக எடுத்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் - டாஸ்மாக் பணியாளர் சங்கம் கோரிக்கை