விபத்தை ஏற்படுத்தித் தரும் காரக கிரகங்கள் செவ்வாய், சனி, ராகு மற்றும் கேது என நான்கு ஆகும். இவர்கள் நிற்கின்ற மற்றும் பார்க்கின்ற காலபுருஷ ராசி ஆளும் லக்னப்படியான பாவத்தாலும் மற்றும் அக்கிரகங்கள் தங்களுக்குள் பார்வை செலுத்திக் கொள்வதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. அதேபோல் பகை கிரகங்கள் சேர்ந்திருப்பதாலும் தங்களுக்குள் பார்த்துக் கொள்வதாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. நான்கு ஆறு எட்டு பன்னிரண்டுக்கு உரியவர்கள் தங்களுக்குள் பார்த்துக் கொண்டாலோ அல்லது இணைந்து இருந்தாலோ விபத்து ஏற்படுகிறது.
பாதக தசா புத்தி:
விபத்தின் போது மாறாக பாதக தசா புத்தி நடக்காத போது விபத்தால் பெரிய கண்டங்கள் நடக்காது. மாறக பாதக தசாபுத்தி நடந்தால் மரணத்திற்கு சமமான ஊனமோ கண்டமோ, மரணமோ கூட நடக்க வாய்ப்புண்டு. செவ்வாயுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்து சனியை பார்த்தால் அல்லது சூரியனை பார்த்தால் விபத்துக்கள் நேரிட்டு அறுவை சிகிச்சை வரை செல்கிறது.
செவ்வாய் சனி சேர்ந்த ராசியில் அல்லது சேர்ந்து பார்த்த ராசியில் இக்கிரகங்களின் பார்வை பட்ட ராசியில் கோச்சாரத்தில் செவ்வாய் சனி ராகு கேது என்ற நால்வரில் இருவர் தொடர்பாவது இருந்தால் இவையே விபத்து ஏற்படுவதற்கான கிரக அமைப்புகள் ஆகும். மேற்கண்ட விதிகளின்படி செவ்வாய் சனி, ராகு கேது இவர்களால் விபத்து ஏற்படுத்தக்கூடிய கிரகச் சேர்க்கை பார்வையை பல ஜாதகங்களில் நாம் பார்த்திருக்கிறோம். யானைக்கால் வியாதி ஒரு பண்டம் மேலே விழுவதால் ஏற்படும் காயம். சனி சந்திரன் சேர்க்கைக்கு கிணறு வெட்டும்போது ஏற்படும் காயம் சனி சுக்கிரன் சேர்க்கைக்கு வாகனம் மூலம் ஏற்படுத்தும் விபத்து சனி சுக்கிரன் செவ்வாய் சேர்க்கைக்கு ஒரு வாகனம் மேலே ஏறுவதால் ஏற்படுத்தும் விபத்து போன்றவை சுட்டிக்காட்டுகிறது.
காரக கிரகங்கள்:
சூரியன் எலும்பையும் எலும்பு மஜ்ஜைகளையும், சந்திரன் எலும்பில் இருக்கும் ரத்தம் உயிர்ப்பு தன்மையையும், செவ்வாய் எழும்பின் பலம் பலவீனத்தையும் உடலின் மொத்த கட்டமைப்பையும், புதன் நரம்புகளையும் தோலையும், சுக்கிரன் எலும்புகளின் வளர்ச்சியையும், சனி எலும்பின் பலவீனத்தையும், ராகு உருப்பு துண்டிப்பதையும் உடம்பில் உள்ள ஒரு உறுப்பு செயல் இழப்பதையும் கேது சிக்கலான நிலைக்கு உறுப்புகள் தள்ளப்படுவதையும் குறிக்கும் காரக கிரகங்களாகும்.
உடம்பில் ஒரு உறுப்பு செயல் இழத்தல், துண்டித்தல் காரணம் என்ன ?
ராசி அதிபதிகள் மற்றும் ராசியில் இருக்கும் கிரகங்கள் வெளி உறுப்பையும் நட்சத்திராதிபதிகள் உள் உறுப்புகளையும் குறிக்கின்றது. இரண்டும் தொடர்பாகும் போது உள், வெளி என இரு உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சனி ராகு அல்லது கேது குறிக்கும் உறுப்பு செயல் இழக்கப் போவதையோ அல்லது உடலில் இருந்து பிரிவதையோ காட்டப் போகிறது. மேலே சொன்ன கிரகங்களின் நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்தால் அந்த கிரகம் இருக்கும் ராசி லக்னத்திற்கு எத்தனையாவது பாவமாக வருகிறது அந்த பாவகத்தின் காரக உறுப்பு செயலிழக்கும். அதேபோல அவர்களின் நட்சத்திரத்தில் கிரகம் இல்லாத போது அவர்கள் நின்ற பாவத்தின் காரக உறுப்பு துண்டிக்கப்படுகிறது அல்லது செயல் இழக்கிறது.
செயற்கை உறுப்புகளை பொருத்திக் கொள்ள ராகு அல்லது கேது ஒரு முக்கியமான காரக கிரகம் ஆகிறது. செயற்கை உறுப்புகளை உடம்பு ஏற்றுக்கொள்ள செவ்வாயும் குருவும் காரக கிரகம் ஆகிறது. செவ்வாய் குரு இவர்களின் பலம் அதிகமாக இருக்கும் போது உடம்பானது செயற்கை உறுப்புகளை ஏற்றுக் கொள்கிறது. இப்படியாக விபத்துகளை பற்றி அல்லது ஒரு உறுப்பு உங்களுக்கு செயல் இழப்பதை பற்றியோ அல்லது உறுப்பு துண்டிக்கப்படுவதை பற்றியோ நாம் கூற முடியும்.