Aavani Month Rasipalan: விருச்சிக ராசிக்காரர்களே, ஆவணி மாதம் என்ன பலன்களைக் கொடுக்கும் தெரியுமா?

Viruchigam Aavani Month Rasipalan: அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன் பிரவேசிக்கிறார்.

Continues below advertisement

விருச்சிக ராசி - ஆவணி மாத ராசி பலன்:

அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன் பிரவேசிக்கிறார். என்ன ஒரு ஆச்சரியம் என்றால்  மேஷம் விருச்சகம் சிம்மம்  மூன்றுமே  சூட்டோடு சம்பந்தப்பட்டது  நெருப்பு எரியும்போது வெப்பத்தை உணர முடியும்.  வெளிச்சத்தையும் பார்க்க முடியும்.  வெப்பம் வெளிச்சம் இவை இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. எரிகின்ற பொருளிலிருந்து எப்படி இரண்டுமே வருகிறதோ அதேபோன்று  மேஷம் விருச்சகம் மற்றும் சிம்மம் மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

Continues below advertisement

வேலை உங்கள் வீட்டு வாயில் தேடி வரும்:

மேஷமும் விருச்சிகமும் வெப்பம் என்று வைத்துக் கொண்டால் சூரியன் வெளிச்சம்.  ஏற்கனவே சொன்னது போல சூரியன் ஆட்சி பெறுவது விருச்சிகத்திற்கு அமோகமான பலன்களை கொடுக்கும். நீண்ட நாட்களாக பல தேர்வுகளை எழுதி விட்டேன் அரசு வேலை கிடைக்கவில்லை என்று ஏக்கத்தோடு இருப்பவர்களுக்கு தற்போது எழுதுங்கள் அந்த வேலை உங்கள் வீட்டு வாயில் தேடி வரும். அரசு உதவி பெறும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.  குறிப்பாக கோர்ட் கேசு வம்பு வழக்கு உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது என்றால் அதிலிருந்து சுலபமாக நல்ல நீதி கிடைத்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அடுத்தவர்களுக்காக போராடுகின்ற போராட்ட குணம் உடையவர்கள் நீங்கள்.  மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு சிறிய பிரச்சனை என்றால் கூட உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.  உடனடியாக மற்றவர்களை காப்பாற்றுவதற்கு சென்று விடுவீர்கள்.

குறிப்பாக  கஷ்டத்தில் இருப்பவர்களை கண்டால் மனம் உடனே இறங்கி விடும். கடக ராசி எப்படி தாயுள்ளம் கொண்டது அதேபோல தான் விருச்சிக ராசியும் மீன ராசியும்  இப்படியாக உங்களின் அன்பினால் மற்றவர்கள் கவரப்படுவார்கள்.  எனக்கென்ன அது அவர்கள் வேலை என்று விடாமல்  வேலை ஸ்தலங்களில் இருக்கக்கூடிய மற்றவர்களின் வேலையும் நீங்கள் இழுத்துப் போட்டு செய்வீர்கள்.  அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு உங்களுடைய வழிகாட்டுதல் சிறப்பாய் அமையும். 

நீங்கள் செய்கின்ற வேலையை போல மற்றவர்களால் செய்ய முடியவில்லை என்ற பாராட்டை நீங்கள் பெறப் போகிறீர்கள். ஒருவேளை நீங்கள் இல்லத்தரசிகளாக கூட இருக்கலாம். நான் சொல்லுகின்ற அனைத்துமே அனைத்து விருச்சக ராசியினருக்கும் பொருந்தும்  குறிப்பாக ஒலி கிரகமான  சூரியன் பத்தில் அமர்ந்திருக்க  காற்று கிரகமான குரு ஏழிலிருந்து பார்க்கிறார். திருமணம் சம்பந்தமான காரியங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

விநாயகரை வழிபடுங்கள்:

திருமண பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடியும்  நல்ல வரன் கிடைத்து வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பணத்தை பொருத்தவரை நீங்கள் செலவு செய்யும் அதே வேளையில் வரவும் தாராளமாகத் தான் இருக்கும். ஆனால்  11-ல் கேது அமர்ந்து உங்களுக்கு வரக்கூடிய லாபத்தை தடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதையும் தாண்டி நீங்கள் லாபத்தை அடைவதற்கு விநாயகரை வழிபடுங்கள்  யானை முகத்தனை வழிபடும்போது  கஷ்டங்கள் சங்கடங்கள் பிரச்சனைகள் விலகி நன்மை பிறக்கும். கடந்த ஒரு வருடமாகவே லாபத்தை பார்க்க முடியவில்லை என்று ஏக்கத்தோடு சிலர் இருக்கலாம் கவலை வேண்டாம். விநாயகர் வழிபட வழிபட  இங்கே உங்களுக்கு லாபம் இருக்கிறது என்பதை சுலபமாக தெரிந்து கொள்வீர்கள்  வருங்காலம் வசந்தமாகும் வாழ்த்துக்கள்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola