Aavani Month Rasipalan: வாசகர்களே.. கன்னி ராசி - ஆவணி மாத ராசி பலன் இதோ..

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஆவணி மாதம்  எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்

Continues below advertisement

 கன்னி ராசி  - ஆவணி மாத ராசி பலன்:

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஆவணி மாதம்  எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம். உங்களுக்கு சற்று மக்களை விட்டு தள்ளி போக வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். உதாரணத்திற்கு ஏற்கனவே பழகி இருந்த நபர்களை விட்டு வேலை மாற்றத்தால் வெளியூர் சென்று இருக்கலாம் நீங்கள் அல்லது டிரான்ஸ்ஃபர் என்று சொல்லக்கூடிய இடம் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

Continues below advertisement

வீடு மாதிரி ஒரு புதிய வீடு கூட குடி ஏறி இருக்கலாம். எப்படியாக இருந்தாலும்  நீங்கள் சற்று மற்றவர்களின் கண்ணில் படாமல் இருக்கும் வகையில் தான் உங்களுடைய செயல்பாடுகள் கூட இருக்கும்.  லக்கனத்தில் கேது வருவதற்கு முன்பாக நீங்கள் மற்றவரிடத்தில் சகாயமாக பேசி பழகி  சிரித்து மகிழ்ந்து இருந்த காலங்கள் இருக்கும் ஆனால் தற்போது கேது வந்த பின்பு  சிறு தடுமாற்றம் ஏற்படலாம். கவலை வேண்டாம்  வருகின்ற காலங்கள் உங்களுக்கு மிகப்பெரிய யோகங்களை கொண்டு வரப் போகிறது.

 குறிப்பாக  இந்த ஆவணி மாதத்தில் 12 ஆம் வீட்டில் சூரியன் ஆட்சி பெறுகிறார். ஒரு மனிதனுக்கு எவ்வளவு இருந்தாலும் நல்ல உறக்கம் இல்லை என்றால் எதுவுமே இல்லை.  இறுதியாக வேலை எல்லாம் முடித்துவிட்டு மனிதன் செய்வது  உறங்குவது.  இந்த உறக்கம் என்று சொல்லக்கூடிய  இடத்தில் சூரியன் ஆட்சி பெறுவது நல்ல நித்திரையை  கொடு நல்ல வைராற உணவருந்தி விட்டு  நல்ல உறக்கம்  இருக்குமாயின் மனிதன் ஆரோக்கியமாக இருப்பான்.  நோய்கள் உங்களை விட்டு விலகும் இடம் 12  இந்த இடத்தில் சூரியன் அமர்ந்திருக்கும் போது  பெரிய  அறுவை சிகிச்சை என்று சொல்லக்கூடிய மேஜர் ஆபரேஷன்  போன்றவை நடைபெறுமாயின் அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.

உங்களுடைய வாழ்க்கை துணைக்கு நல்ல வேலை அமையும்:

 இந்த அறுவை சிகிச்சை மூலமாக ஏற்கனவே உங்களை தொந்தரவு செய்து கொண்டிருந்த பெரிய நோய்கள் எல்லாம் விலகி  விடுதலை அடைவீர்கள். கண்ணிய பொறுத்தவரை ஒன்பதாம் வீட்டில் குரு அமர்ந்து ராசியை பார்ப்பது எவ்வளவு பெரிய சிக்கல்கள் வந்தாலும் அதை எதிர் கொள்ள  பெரிய மன தைரியத்தை கொடுக்கும்.  நண்பர்களின் உதவி கிட்டும் அவர்கள் தேடி வந்து உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள்.  தைரியமாக நீங்கள் செயல்பட கூடிய காலகட்டம் தான்  ராகு ஏழில் இருக்கிறார்.

திருமணம் செய்ய  காத்திருப்போர்  திருமண பேச்சு வார்த்தைகளை தற்போது ஆரம்பிக்கலாம். உங்களுடைய வாழ்க்கை துணைக்கு நல்ல வேலை அமையும். சிலருக்கு அரசு வேலை கூட கிடைக்கலாம்.  நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணப்பட்டு போகும்போது  அங்கே உங்களுக்கு எந்த ஒரு சிறப்பான இடம் அமைந்திருக்கும். அது உங்கள் கௌரவத்தை சுட்டிக்காட்டும்.  எதிர்காலம் பொருத்தவரை உங்களுக்கு நன்றாக இருப்பதால் தற்போது இருக்கும் எந்த பிரச்சனையும் பெரிதாக உங்களுக்கு இருக்காது.

சாதிக்கக்கூடிய நபராக மாறலாம்:

 சூரியனைப் பொறுத்தவரை கேது நட்சத்திரத்தில் பயணம் செய்யும்போது  நீங்களே பெரிய அளவுக்கு சாதிக்கக்கூடிய நபராக மாறலாம்  ஆன்மீகத்தின் மீது நாட்டம் செல்லும்  மனதிற்கு பிடித்த இனிய காரியங்கள் நடைபெறும்  நீண்ட நாட்களாக பார்க்காமல் இருந்த பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்  எங்கே முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று வங்கிகளை தேடி செல்லப் போகிறீர்கள்  எதிர்காலம் பற்றின பயம் இருக்காது.  சுப காரியங்கள் வீட்டில் நகர்ந்தேறும்  சுபச் செலவுகள் உங்களுக்கு ஏற்படும்  கையில் பணம் இருந்தால் அது தற்போது கரையும் வாய்ப்பு உண்டு  அவர் இந்த காரியத்திற்காக இவ்வளவு செலவு செய்து உள்ளார் என்று மற்றவர்கள் பேசும் அளவிற்கு உங்களுடைய செலவுகள் இருக்கலாம் அது சுபச் செலவுகள் ஆகும் கவலை வேண்டாம்  சிவபெருமானை வணங்கி வாருங்கள்  நன்மை நடைபெறும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola