Aavani Month Rasipalan: மிதுன ராசிக்காரர்களே, ஆவணி மாதம் உங்களுக்கு கொடுக்கப்போகும் பலன் தெரியுமா?

அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு 3 சூரியன் பெயர்ச்சியாவது  மிகப்பெரிய யோகத்தை கொண்டு வரும்.

Continues below advertisement

மிதுன ராசி - ஆவணி மாத ராசி பலன்:

அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு 3 சூரியன் பெயர்ச்சியாவது  மிகப்பெரிய யோகத்தை கொண்டு வரும். ஒருவரின் ஜாதகத்தில்  அவர் நினைத்தது நடக்க வேண்டும்  கேட்டது கிடைக்க வேண்டும்  அல்லது எண்ணியது ஈடேற வேண்டும் என்றெல்லாம் ஆசை இருக்குமாயின்  அந்த ஆசை நிறைவேறுவது மூன்றாம் இடத்தை பொறுத்து தான் அமையும்.  நீங்கள்  ஒரு காரியத்தை எப்படி செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்கள் வெற்றி அமையும்  கிரிக்கெட் விளையாட வேண்டிய மைதானத்தில் நீங்கள் புட்பால் விளையாட முடியாது.   உங்களுடைய ஆக்சன் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் உங்கள் வெற்றியின் ரியாக்ஷனும் இருக்கும்.

Continues below advertisement

தைரியத்தோடு ஒரு காரியத்தை அணுக வைக்கும்:

மொத்தத்தில் உங்களின் ஆக்சன் என்பது மூன்றாம் வீடு. நீங்கள் அடுத்தவரிடத்தில் எப்படி பேசுகிறீர்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் யாரேனும் உங்களிடம் பேசினால் அவர்களுக்கு எப்படி பதில் கூற போகிறீர்கள்.  ஒரு காரியத்தை எவ்வளவு வேகமாக முடிப்பீர்கள் என்பது எல்லாம் மூன்றாம் வீட்டை பொருத்த தான் அமையும். அப்படிப்பட்ட மூன்றாம் இடத்தில் சூரியன் ஆட்சி பெறுவது செய்யும் வேலையில் தைரியத்தை கொடுக்கும்.  உங்களை ஒரு தன்னம்பிக்கை மிகுந்தவராக மாற்றும். அமைதியாக நீங்கள் பேசுபவராக இதனால் வரையில் இருந்திருந்தாலும்  தன்னம்பிக்கை உள்ளவர்களாக உங்களை மாற்றி தைரியத்தோடு ஒரு காரியத்தை அணுக வைக்கும்.

 மிதுன ராசிக்கு ஏற்கனவே பன்னிரண்டாம் வீட்டில் குரு பகவான் அமர்ந்து அதிகப்படியான சுபச் செலவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்  எப்படி சமாளிக்க போகிறோம் வரவு அதிகமாக இருந்தால் செலவு அதைவிட அதிகமாக இருக்கிறது என்று கவலையிலிருந்து இருப்பீர்கள்  அந்தக் கவலைக்கெல்லாம் கைமாறாக தான் தற்போது சூரியன் ஆட்சி பெறுவது உங்களுக்கு நன்மையை விளைவிக்கும்.  புதியதாக வாகனம் வாங்க வேண்டும் வீடு சரியில்லை வாடகை வீட்டில் இருக்கிறேன் வேற வீட்டிற்கு மாற்ற வேண்டும் என்றெல்லாம் யோசிப்பவர்களுக்கு இந்த காலகட்டம் ஒரு சிறந்த காலகட்டம் . உங்களுக்கென்று நிலம் இருக்கிறது அதை விற்க வேண்டும் விற்று வேறு ஒரு இடத்தை வாங்க வேண்டும் என்று பிளான் வைத்திருந்தால் அதுவும் தற்போது நடைபெறும்.

விஷ்ணு வழிபாடு:

 சூரியனைப் பொறுத்தவரை மகம் நட்சத்திரத்தில் பயணம் செய்யும்போது புதிய வண்டி வாகனம் வாங்குவது அல்லது பழைய வண்டி வாகனம் வாங்கி அதை புதுப்பிப்பது  வீடு கட்டுவது அல்லது பழைய வீட்டை வாங்குவது  போன்ற செயல்பாடுகள் சாதகமாக முடியும்.  கோர்ட் கேஸ் வம்பு வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள்.  பூரம் நட்சத்திரத்தில் பயணிக்கும் போது நீண்ட தூர பிராயணங்களை மேற்கொள்ளலாம்.   இடமாற்றம் உண்டாகும் தொழில் மாற்றம் ஏற்படலாம்.  உத்தர நட்சத்திரத்தில் பயணிக்கும் போது எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.  எனவே இந்த ஒரு மாத காலகட்டம் உங்களுக்கானது சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பகவான் ஸ்ரீ  விஷ்ணுவை வழிபட்டு வாருங்கள். 

Continues below advertisement
Sponsored Links by Taboola