Aavani Month Rasipalan: மீன ராசிக்காரங்களுக்கு ஆவணி, என்னவெல்லாம் பலன் கொடுக்கும்னு தெரியுமா?

Aavani Month Rasipalan: அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே, யாருக்கேனும் ஒரு பிரச்சனை என்றால் முதலில் போய் அவர்களை விசாரித்து ஆறுதல் கூறுவது நீங்கள் தான்.

Continues below advertisement

மீன ராசி - ஆவணி மாத ராசி பலன்:

அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே, யாருக்கேனும் ஒரு பிரச்சனை என்றால் முதலில் போய் அவர்களை விசாரித்து ஆறுதல் கூறுவது நீங்கள் தான்.  தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர் நீங்கள். உங்களுடைய ராசிக்கு..ஆறாம் வீட்டில் ஆட்சி பெரும் சூரியன் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்கலாம்..

Continues below advertisement

ஆறு என்பது  உங்களைத் தேடி வரும் நபர்களை குறிக்கும்  நீங்கள் எதிர்பார்க்காத வகையில் உங்களை தேடி வருபவர்களோ அல்லது உங்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மை தீமையோ குறிக்கும் இடம். நோய் உங்களைக் கேட்டு வருவதில்லை அவை தானாகவே வருகிறது.  மகிழ்ச்சி உங்களைக் கேட்டு வருவதில்லை. அவையும் தானாகவே வருகிறது. ஆனால் பணம் சம்பாதிப்பதை பொருத்தவரை  அவை யார் கட்டுப்பாட்டிலும் இல்லை எவ்வளவு வேண்டுமென்றாலும் சம்பாதிக்க முடியும். சில காரியங்கள் எதற்காக நடைபெறுகிறது என்று தெரியாமலேயே இருக்கும். அப்படியான இடம்தான் ஆறு இந்த இடத்தில் ஒளிபொருந்திய ஒரு நட்சத்திரம் சூரியன் ஆட்சி பெற்று விலகும்போது என்ன மாதிரியான சக்தியை உங்களுக்கு வழங்கப் போகிறார் என்றால்  பின்னால் சதி செய்து  உங்களை குறை கூறுபவர்கள்  உங்கள் கண்களுக்கு தற்போது தெரிய ஆரம்பிப்பார்கள்.  

உதவிகள் கிடைக்கும்:

யாரிடத்தில் என்ன பேசினார். காரியம் எப்படி நடைபெறும் என்று கச்சிதமாகத் தெரிந்து வைத்திருக்கக் கூடிய உங்களுக்கு  ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு. நல்ல உணவுகளை சாப்பிடுவதில் வல்லவர்.  மீன ராசி என்றாலே  உணவிற்கு பேர் போன ராசி தான், ஆகையால் ஆறாம் இடம் என்பது நோயைக் குறிக்கும்.  வாய் கட்டுப்பாடு அவசியம் . ஆனால் அதே சமயத்தில் தொழில் ஸ்தானத்திற்கு  ஆறாம் இடம் என்பது ஒன்பதாம் இடமாக வருவதால்  வேலை நிமித்தமாக உங்களுக்கு என்ன உதவிகள் வேண்டுமென்றாலும் கிடைக்கும். 

போட்டி தேர்வுகளில் வெற்றி:

 தொடர்ந்து தொழிலில் போட்டியில்  இருந்தாலும்  அல்லது எதிரிகளால் தொழில் தொல்லை இருந்தாலும் மாறக்கூடிய சூழல் தற்போது உருவாகும்.  பம்பரமாய் சென்று வேலை செய்பவர் நீங்கள். இது போன்ற காலகட்டத்தில் தைரியமாக சில முடிவுகள் எடுக்கக்கூடிய வேலை வரும். குடும்பத்தோடு நீண்ட தூரப் பிரயாணங்களை மேற்கொள்ள வாய்ப்புண்டு அல்லது உங்கள் வாழ்க்கை துணை ஏதோ ஒரு காரணத்திற்காக வெகு தூர பிரயாணத்தை மேற்கொள்வார் நீங்களும் போகலாம் அல்லது அவரே தனியாகவும் செல்லலாம்.  இப்படியான சூழ்நிலையில்  உங்களுக்கு  போட்டி தேர்வுகளில் வெற்றி என்பது சுலபமாக கிடைக்கும்  அரசு வழி ஆதாயம் உண்டு  ஏதேனும் கோர்ட்டு கேஸ் வம்பு வழக்குகள் உங்களுக்கு இருக்கிறது என்று வைத்துக் கொண்டால்  அவையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

நீதிமன்றத்திலேயே உங்களுக்கு சாதகமான தீர்ப்பு தான்  ஆறாம் வீட்டு சூரியனின் ஆட்சி சக்தி உங்களுக்கு ஏற்ற சாதகமான பலன்களை கொண்டு வந்து கொடுப்பார். தனஸ்தானம் என்று சொல்லக்கூடிய பணவருவாயை பொருத்தவரை 11ஆம் வீட்டிற்கு அஷ்டமத்தில் இருப்பதால்  லாபம் எதனால் வரவில்லை என்ற புதிய சிந்தனைகள் உங்களுக்கு தோன்றும். அப்படி தோன்றிய சிந்தனைகளை வைத்து கணக்கு போட்டால் அடுத்து வரக்கூடிய லாபத்தை எப்படி ஈட்டலாம் என்ற  முடிவை கண்டுபிடிப்பீர்கள். 

திருமணம் நடைபெறக்கூடிய காலகட்டம்:

நீண்ட நாட்களாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்  திருமணம் நடைபெறவில்லை என்று ஏக்கமாக இருக்கும்  மீன ராசி அன்பர்களுக்கு தற்போது திருமணம் நடைபெறக்கூடிய காலகட்டம். .  சில நண்பர்கள் நன்றாக பேசுவார்கள் சில நண்பர்கள் உங்களை பாதியிலேயே விட்டுவிட்டு சென்று விடுவார்கள் தற்போது லக்னத்தில் இருக்கும் ராகுவால் இப்படிப்பட்ட சங்கடங்களை நீங்கள் சந்திக்கலாம் ஆனால் எதிர்காலம் சிறப்பாக அமையும் .   ஆன்மீகத்தில் மனம் செல்லும்.  ஞாயிறு தோறும் ராகு காலத்தில்  துர்க்கை அம்மனை வழிபட்டு தீபம் ஏற்றி வாருங்கள்  மலை அளவு பிரச்சனை கூட சிறிதளவு  கடுகு போன்று   சின்னதாக காணப்படும்....   கவலை வேண்டாம் ஆவணி மாதம் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola