Siragadikka Aasai August 20 : விஜய் டிவியின் பிரபலமான 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 20) எபிசோடில் சத்யாவின் பிறந்தநாளுக்கு போக கூடாது என முத்து மீனாவிடம் சொல்லி விட்டு சவாரிக்கு போகிறான். மீனா கவலையுடன் இருப்பதை பார்த்த ஸ்ருதி அவளுக்கு அட்வைஸ் செய்கிறாள். "உங்க தம்பி பர்த்டேக்கு போக கூடாது என சொல்றதுக்கு முத்துவுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு. நீ போக வேண்டாம் என சொன்னா அவர் போகமா இருப்பாரா? இப்போ நீங்க போகலைனா அப்புறம் உங்க தம்பி உங்க கிட்ட பேசாமலே போயிடுவான். அது உங்களுக்கு பரவாலயா?" என ஸ்ருதி மீனாவை குழப்பி விடுகிறாள். இவர்கள் இருவரும் பேசி கொள்வதை விஜயா கேட்டுவிடுகிறாள். 


 



கோயிலில் மீனாவுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். அக்கா வரலைனா எனக்கு எதுவும் செய்ய வேண்டாம் என சத்யா பிடிவாதம் பிடிக்கிறான். அந்த நேரத்தில் மீனா வரவும் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். வீட்டில் நடந்த பிரச்சினை பற்றி சொல்லாமல் வேலை இருக்கு சீக்கிரம் போகணும் என்று மட்டும் அம்மாவிடம் சொல்கிறாள் மீனா. பின்னர் அனைவரும் கூழ் கொடுக்கிறார்கள். என்னோட பிறந்தநாளை விட நீ வந்தது தான் அக்கா என சந்தோஷம் என்கிறான் சத்யா. 


வீட்டுக்கு வந்த முத்து மீனாவை வீடு முழுக்க தேடுகிறான், விஜயா வந்து முத்துவிடம் மீனா கோயிலுக்கு போன விஷயத்தை பற்ற வைக்கிறாள். விஜயா சொல்வதை முத்து நம்பவே இல்லை. "நான் போக கூடாதுன்னு சொல்லி இருக்கேன். என்னை மீறி அவ போக மாட்டா. பூ கொடுப்பதற்காக எங்கயாவது போயிருப்பா. எனக்கு அவளை பத்தி தெரியும்" ஏன் நம்பிகையுடன் சொல்கிறான் முத்து. 


"நல்லா உன்னை ஏமாத்தி வைச்சு இருக்கா. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லாட்டி கோயிலுக்கு போய் பாரு" என தூண்டி விடுகிறாள் விஜயா. முத்து கோயிலுக்கு போய் பார்க்கிறான். அங்கு மீனா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அவனுக்கு கூழ் ஊற்ற சொல்லி கப்பை முறைத்து கொண்டே  நீட்ட அதை பார்த்து மீனா மிரள்கிறாள். மீனாவின் அம்மா முத்து வந்ததை நினைத்து சந்தோஷப்படுகிறார். ஆனால் முத்து,  மீனா தன்னை  ஏமாற்றியதை நினைத்து மனம் வேதனைப்பட்டு பேசி விட்டு கிளம்பி விடுகிறான். 



வீட்டுக்கு வந்த மீனா அண்ணாமலையிடம் கூழ் ஊற்றியது பற்றி சொல்லி அவருக்கு கொடுக்கிறாள். விஜயாவிடம் கொடுக்க அவள் வழக்கம் போல கேவலப்படுத்தி பேசுகிறாள். முத்துவை ஏத்திவிட்டது பற்றியும் சொல்கிறாள். மீனா வருத்தத்துடன் இருக்க அங்கே வந்த ஸ்ருதி "என்ன மீனா கோயிலுக்கு போயிட்டு வந்துடீங்களா?" என கேட்கிறாள். மீனா நடந்ததை சொல்ல என்ன சொல்வதென தெரியாமல் ஸ்ருதி ரூமுக்கு போய் விடுகிறாள். 


 




முத்துக்காக ரொம்ப நேரமாக மீனா காத்திருக்கிறாள். ஆனால் முத்து குடித்துவிட்டு வருகிறான். அது மீனாவுக்கு ஷாக்காக இருக்கிறது. மீனா முத்துவின் பேச்சை கேட்காமல் கோயிலுக்கு போய் அவமானப்படுத்தியதை நினைத்து வருத்தப்பட்டு பேசுகிறான். அப்படியே போய் கட்டிலில் படுத்து கொள்கிறான். வெளியில் வந்து பார்த்த விஜயா "நான் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்" என மீனாவை நோகடிக்கிறாள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.