அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே, குரு ஒரு வழியாக உங்கள் ராசிக்கு வக்கிரம் பெற்று பதினோராம் வீட்டை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார். ஏற்கனவே சரிவுகளில் இருந்து எப்படி மீள்வது என்பது குறித்து யோசிக்கும் உங்களுக்கு ஓரளவுக்கு நல்ல நேரமே. இந்த மார்கழி பொறுத்த வரை  சூரியன் ஏழாம் வீட்டில் அமர்ந்து பெரிய உயர் பதவிகளில் இருக்கும் நபர்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பார். குறிப்பாக, நீங்கள் யாரிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவர்களையே உங்களிடத்தில் கொண்டு வந்து சேர்ப்பார்.  


வாழ்க்கைத் துணை அறிவுரை அவசியம்:


கடன் கேட்டிருப்பீர்கள், அது தொடர்பான தொல்லைகள் இருக்கும். கடன் கொடுத்தவர்கள் கழுத்தை மிதிக்கும் அளவிற்கு கேள்வி கேட்க வாய்ப்பு உண்டு.  மார்கழியில் மிதுனத்திற்கு மூன்றாம் அதிபதி ஏழாம் வீட்டில் அமரும் போது  கூட்டு முயற்சியின் மூலம் வெற்றியை பெறலாம். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு காரியம் செய்ய உங்களுடைய வாழ்க்கை துணையிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுங்கள். அவர்கள் கூறுகின்ற வழிகாட்டுதல் உங்களுக்கு நன்மையை விளைவிக்கும். செழிப்பான எதிர்காலத்தை நோக்கி நீங்கள் நகர்வது, எள்ளளவும் சந்தேகம் இல்லாதது, வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இடம் வீடு தொடர்பாக ஏற்கனவே இருந்த சிக்கல்கள் தற்போது அகல வாய்ப்புண்டு.


படிப்பில் கவனம் தேவை:


மாணவர்கள் அதாவது காலேஜ் போய்க்கொண்டிருப்பவர்கள் சற்று விளையாட்டு போக்கோடு இருக்காமல், நன்றாக படிப்பில் கவனம் செலுத்துங்கள். சுற்றுலா செல்ல குடும்பத்தோடு உங்களுக்கு வாய்ப்பு வரப்போகிறது.  லாபத்தை பொறுத்தவரை குருவே பதினோராம் வீட்டை நோக்கி நகர்வதால், புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். ஏற்கனவே வேலையை விட்டு உங்களுக்கு வேறு ஒரு நல்ல வேலை கிடைக்க ஏற்பாடுகள் நடக்கப் போகிறது. ஒவ்வொருவரின் பிறந்த ஜாதகமும், அவர்களின் தசா புத்தியும், அடுத்து நடக்க விருப்பவைகளை வழி நடத்தும். அந்த வகையில் உங்களுக்கு நல்ல திசையோ அல்லது புத்தியோ நடக்குமாயின் கவலையே வேண்டாம் குரு  12ல் இருந்தால் என்ன அனைத்தும் சாதகமாக முடியும்.  

இழந்ததை அடைவீர்கள்:


மிதுனத்தை பொருத்தவரை ஏழில் சுக்கிரன் டிசம்பர் வரை அமர்ந்திருப்பார். ஜனவரி வரும்பொழுது எட்டாம் வீட்டிற்கு போவார். நீண்ட தூர பிரயாணம் மேற்கொள்ள வேண்டும், அயல்நாடு செல்ல வேண்டும் என்று ஆசைப்படும் மிதுன ராசி அன்பர்களே, தற்போது அதற்கான காலகட்டமாக அமையும். வேலையை பொறுத்தவரை இருக்கின்ற வேலையை விடுத்து வேறு வேலைக்கு செல்ல வேண்டாம்.  ஆனால், காலம் அப்படியான சூழ்நிலையை  உங்களுக்கு உருவாக்கலாம். கவலை வேண்டாம் மார்கழியில்  மாதவனை நினைத்துக் கொள்ளுங்கள். அருகில் இருக்கக்கூடிய பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்.  இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவீர்கள். பட்டம் பதவிகள் உங்களைத் தேடி வரும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம்