விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி பரவலாக பெய்து வருகிறது. புயலினாலும், தொடர் கனமழையினாலும், போதிய வடிகால் வசதி இல்லாத சூழ்நிலையாலும் வயலில் மழைநீர் அளவுக்கு அதிகமாக தேங்கி பயிர்கள் சேதம் அடைகின்றன. மேலாண்மை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் பயிர்களை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம் என வேளாண்மை துறை விழிப்புணர்வு.

Continues below advertisement

பயிர்களை வெள்ள பாதிப்பில் இருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்!

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி பரவலாக பெய்து வருகிறது. புயலினாலும், தொடர் கனமழையினாலும், போதிய வடிகால் வசதி இல்லாத சூழ்நிலையாலும் வயலில் மழைநீர் அளவுக்கு அதிகமாக தேங்கி பயிர்கள் சேதம் அடைகின்றன.

பின்வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்களை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.

Continues below advertisement

  • நெல் வயல்களில் போதிய வடிகால் வசதி ஏற்படுத்தி நீர் தேக்கத்தை குறைக்க வேண்டும்.
  • தரைமட்டத்திலிருந்து 90 செ.மீ ஆழத்தில் வடிமுனை குழாய்களை அமைத்து நீரை வெளியேற்றினால் காற்றோட்டம் சீரடையும்.
  • மழை நீர் வடியும் போது நீருடன் மண்ணிலுள்ள தழைச்சத்து சுண்ணாம்பு, மக்னீசியம், போரான், கந்தகம் மற்றும் சாம்பல் சத்து கரைந்து வெளியாகிவிடும். இதனால் சத்துகள் பற்றாக்குறை ஏற்படும். மழை நீர் வடிந்ததும் தழைச்சத்து உரத்தை அம்மோனிய வடிவில் இடவும். யூரியா இடுவதாக இருந்தால் யூரியாவுடன் ஜிப்சம், மணல் 1:3:5 என்ற விகிதத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்து மறுநாள் இடவும்.
  • DAP 2% இலைவழியாகத் தெளிக்கலாம்.
  • மழை வெள்ளம் காரணமாக மூழ்கிய நெற்பயிரை காக்க நீர் வடித்த பின் இலைகள் அழுகிடாமல் இருப்பின் 2% டி.ஏ.பி + 1% பொட்டாஷ் மற்றும் 1% யூரியா + 0.5% துத்தநாக சல்பேட் கரைசலை 10-15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

மகசூல் இழப்பிலிருந்து பயிர்களை காப்பாற்ற 4 கிலோ DAP உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். மண்ணில் உள்ள நன்மைதரும் நுண்ணுயிர்களின் வளர்ச்சி சீரடைந்து, பயிருக்கு ஊட்டச்சத்து அளிக்க அதிக மழை / வெள்ளம் எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் எக்டருக்கு 2 டன் உமிக்கரியை நடும் முன் நிலத்தில் இட்டு மண்ணுடன் கலக்குவதால் நிலத்தின் வெப்பம் சீராக்கப்பட்டு ஊட்டச்சத்துகள் பயிர்களுக்குத் தடையின்றி கிடைக்க வழிவகுக்கும்.

மேலும் மேகமூட்டமான சீதோஷ்ணநிலை காரணமாக பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாக உள்ளதால் வேம்பு சார்ந்த மருந்துகளை உபயோகப்படுத்த வேண்டும்.

நோய் தாக்குதலை கட்டுப்படுத்திட 1 கிலோ சூடோமோனாஸ் 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து வயலில் இட வேண்டும்.

குளிர்ச்சியான தட்பவெப்ப சூழ்நிலைகளால் பயிர்களின் வளர்ச்சி பாதிப்படைவதை தடுக்க யூரியா, ஜிப்சம்:, வேப்பம்புண்ணாக்கு 5:4:1 விகிதத்தில் கலந்து இடுதல் வேண்டும். மேலும், இலை வழியாக டை அம்மோனியம் பாஸ்பேட் தெளித்தல், தழைச்சத்துடன் சாம்பல் சத்து உரம் சேர்த்து இடல், நுண்ணூட்ட உரமிடல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.

தொடர்மழைக்குப்பின்னர் நெற்பயிரில் படைப்புழு, கூண்டுப்புழு போன்ற பூச்சிகளும், பயறுவகை பயிர்களில் புரொடீனியா புழுக்கள், தத்துப்பூச்சி, அசுவினி போன்ற பூச்சிகளின் தாக்குதலும் அதிகமாக காணப்படும். படைப்புழு மற்றும் கூண்டுப்புழுக்களை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 மிலி. குளோரிபைரிபாஸ் பூச்சிக்கொல்லியினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் பயிர் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். பயறுவகை பயிர்களில் தத்துப்பூச்சி மற்றும் அசுவினி பூச்சிகளை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீருடன் 200 மிலி இமிடா குளோப்ரிட் அல்லது டைமித்தோயேட் கலந்து தெளிக்க வேண்டும்.