புதிய உள்ளூர் வேளாண் தொழில்நுட்பம் கண்டுபிடிப்புகளுக்கு ஒரு விவசாயியும், புதிய வேளாண் இயந்திரம் கண்டுபிடிப்புக்கு ஒரு விவசாயியையும் தேர்வு செய்து தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பரிசு வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்டம் வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் மூலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டில் மாநில அளவில் வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உள்ளூர் புதிய விவசாயிகள் தொழில்நுட்பங்களையும், புதிய இயந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.


 




 


எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதி உடைய விவசாயிகள் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் முதலில் தங்கள் தொலைப்பேசியில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாக தனது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதனைத்தொடர்ந்து இந்த போட்டியில் குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களும் கலந்து கொள்ளலாம் என்றும், மேலும் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஒரே விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வட்டார வேளாண் அல்லது துணை வேளாண் விரிவாக்கம் மையத்தில் நுழைவு கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும்.


NMMS Scholarship Scheme: 4 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் மத்திய அரசு உதவித்தொகை: பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழுவிவரம்


 




Nobel Prize 2022 Literature: இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆனி எர்னாக்ஸ்-க்கு அறிவிப்பு; எதற்கு தெரியுமா?


பின்னர் கட்டணம் செலுத்திய ரசீதுடன் விண்ணப்பம் படிவத்தை இணைத்து வேளாண் உதவி இயக்க அலுவலகத்தில் நேரில் சென்று படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் தகுதியான விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் மாவட்ட தேர்வு குழுக்களால் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் மாநில தேர்வு குழு பரிந்துரை செய்யப்படும், அதன் பிறகு விண்ணப்பங்கள் மாநில குழுவால் பரிசீலிக்கப்பட்டு புதிய உள்ளூர் வேளாண் தொழில்நுட்பம் கண்டுபிடிப்புகளுக்கு ஒரு விவசாயியும், புதிய வேளாண் இயந்திரம் கண்டுபிடிப்புக்கு ஒரு விவசாயியையும் தேர்வு செய்து தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பரிசு வழங்கப்படும், விருப்பம் உள்ள தகுதியும் உள்ள விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயனுடையலாம் என இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.