திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 16 வட்டார வேளாண் விரிவாக்கம் மையங்கள் மற்றும் துணை வேளாண் விரிவாக்கம் மையங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 50 சதவீத மானிய விலையில் நுண்ணூட்ட சத்து கலவை திரவ உயிர் உரங்களான, அசுஸ் பை, பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, ஜிங்க் பாக்டீரியா ஆகியவை விவசாயிகளுக்கு விநாயகம் செய்யப்பட்டு வருகிறது. 


இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் அலுவலக செய்தி குறிப்பில் இருந்து தெரிவித்ததாவது 


திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாம் பருவ சாகுபடி விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விவசாயிகள் அடி உரமாக அதிகளவில் டிஏபி உரத்தை உபயோகப்படுத்துகின்றனர். இதனால் பயிரின் உர எடுப்பு சதவீதம் குறைந்து உள்ளது. இதை மேம்படுத்த விவசாயிகளின் திரவ உயிர் உறங்கலான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, ஜிங்க் பாக்டீரியா ஆகியவற்றை பயிர்களுக்கு தெளித்து பயிர்கள் உரங்களை கிறக்கும் நிலையை ஏற்படுத்தலாம்.  மேலும் நெல் பயிரில் தொடர்ந்து அடி உரமாக டிஏபி இடுவதால் பாசி வளர்ந்து பயிருக்கு இடும் உரங்களை எடுத்துக் கொள்கிறது. இதனால் பயிரின் வளர்ச்சி குறைவதோடு மகசூல் இழப்பும் ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் குருணை வடிவிலான சிங்கிள்  சூப்பர் பாஸ்பேட்  எனப்படும் மணிச்சத்தை இடுவதன் மூலமாக உரச்  செலவை  குறைத்து அதிக மகசூல் பெறலாம். 


கலவை உரம் அளித்தால் அதிக மகசூல் பெறலாம் 


மேலும் இந்த உரம் நீரில் விரைவாக கரையும் அதனால் பயிர்கள் விரைவில் கிரகிக்கும்  மண்வாள அட்டை பரிந்துரையின் படி காம்ப்ளக்ஸ் உரங்கள் அல்லது யூரியா குருணை வடிவ சிங்கின் சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் உரங்கள் தனித்தனியாக வாங்கி கலந்து இடுவதன் மூலமாக உரச்செலவை குறைத்து அதிக மகசூலை  பெறலாம் விரிவாக்க மையங்களிலும் பணம் இல்லா பரிவர்த்தனை மூலமாக இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.  எனவே விவசாயிகள் ஏடிஎம் கார்டு, கூகுள் பேய் மற்றும் போன் பே மூலமாக பணம் பரிவர்த்தனை செய்து கொண்டு உடனடியாக ரசீதை பெற்றுக் கொள்ளும்மாறு இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.