திருவண்ணாமலை (Tiruvannamalai news): திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 நேரடி நெல் கொள்முதல் மையங்களில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி அடைந்தனர்.
நெல் விற்பனைக்கு நேரடி கொள்முதல் நிலையங்களில் குறைந்த நபர்களே பதிவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024 முதல் 2025-ஆம் ஆண்டுக்கான சொரனவரி பருவத்துக்கு முதல் கட்டமாக 34 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதற்கான முன்பதிவு கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கியது. ஆனால் நேற்று மாலை வரை குறைந்த அளவிலேயே விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த காலங்களில் தனி நபர்கள் மிகவும் விலை குறைவாகவும் இடையில் அதிகமாக வைத்து வாங்கியதால் விவசாயிகள் அனைவரும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையே நாடி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் சம்பா பருவத்தின் போது அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டை ஒன்றுக்கு 2700 வரை வெளிமார்க்கெட்டில் விலை போனதனால் விவசாயிகள் யாரும் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு செல்லவில்லை, தாங்கள் அறுவடை செய்த நெல் முழுவதையும் உடனடியாக தனியார் நபர்களிடமே நல்ல விலைக்கு விவசாயிகள் விற்றனர். இதனால் சம்பா மற்றும் இரண்டாம் பாகத்திற்கு திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் மையங்கள் காத்து வாங்குகின்றன.
காற்று வாங்கும் நேரடி கொள்முதல் நிலையங்கள்
இருப்பினும் இப்போது சொரனவரி பருவத்துக்கு பெரிய கிளாம்பாடி, கீழ்பெண்ணாத்தூர், அணுகுமலை, சோமாஸ்பாடி தண்டராம்பட்டு, அரட்டவாடி, பீமனந்தல், மேல்முடியனூர், காரப்பட்டு, எலத்தூர், ஆதமங்கலம், கடலாடி ,இடப்பிறை ,ஆர் குன்னத்தூர், அரியம்பாடி, தச்சூர், மருதாடு, குவளை ,பெருங்குளத்தூர், பாரசூர் ,மேல்சிசி மங்கலம், ஆலத்துறை, ஆலத்தூர், வெங்கட், தவசிமேடு, ஆக்கூர், எச்சூர், வெம்பாக்கம், வட இலுப்பை, நாட்டேரி, தென்னம்பட்டு, அரியூர், கீழநெல்லி ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 11ஆம் தேதி திறக்கப்பட்டது. எனவே விவசாயிகள் அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி கொள்முதல் மையங்களில் நெல் விற்பனை செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. இருப்பினும் அரசின் கொள்முதல் மையத்தை விட நெல்மூட்டைகள் தனியாரிடம் அதிக விலை போவதால் விவசாயிகள் யாரும் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது
பொதுவாகவே தற்போது அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை அதிகரித்துள்ளது. தங்களால் பொருட்கள் எதுவும் வாங்கமுடியவில்லை, இதற்காக விவசாயிகள் நாங்கள் கடன் வாங்கி விவசாயம் பார்க்கிறோம். அப்படி அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை நேரடி கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து வர வேண்டும் என்றால், வாகனத்தின் மூலம் எடுத்துவர வேண்டியதுள்ளது. ஆனால் தனியார் காரார்கள் தங்களுடைய விவசாய நிலத்திற்கே வந்து எடை வைத்து அதற்கான பணத்தை உடனடியாக தந்து விட்டு செல்கின்றனர் என்று தெரிவித்தனர்.